26 நக்சல்கள் சுட்டுக்கொலை

Added : நவ 14, 2021
Share
Advertisement
நாக்பூர்,:மஹாராஷ்டிராவில் வனப் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில், 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கட்சிரோலி மாவட்டத்தின் வனப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல்கள்

நாக்பூர்,:மஹாராஷ்டிராவில் வனப் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில், 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கட்சிரோலி மாவட்டத்தின் வனப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, அந்த வனப் பகுதிக்கு விரைந்த போலீஸ் கூடுதல் எஸ்.பி., சவுமியா முண்டே தலைமையிலான கமாண்டோ பிரிவினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதன்பின் நக்சலைட்டு களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின், அவர்களிடம் இருந்த ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும், மூத்த நக்சல் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கிடையே துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த நான்கு போலீசார், ஹெலிகாப்டர்உதவியுடன் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X