பொது செய்தி

இந்தியா

5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இலாக்கா மாற்றம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான இலாக்காக்கள் மறு ஒதுக்கீடு செய்து தலைமை செயலர் அஸ்வனிக்குமார் நேற்று உத்தரவிட்டார்.புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் உதயக்குமாருக்கு, சுகாதாரத் துறை கூடுதலாக

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான இலாக்காக்கள் மறு ஒதுக்கீடு செய்து தலைமை செயலர் அஸ்வனிக்குமார் நேற்று உத்தரவிட்டார்.புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் உதயக்குமாருக்கு, சுகாதாரத் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பான்கேர் சேர்மன் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு செயலர் ரவிபிரகாஷிற்கு ஏற்கனவே வகித்து வந்த பதவியுடன், கால்நடைத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித்துறை செயலர் வல்லவனுக்கு, கலால் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. கலால் துறை செயலர் மற்றும் கலால் ஆணையர் இரு பொறுப்பும் சேர்ந்தே கவனிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு செயலர் அருணுக்கு, தொழில் மற்றும் வணிகத்துறை, மீட்பு மற்றும் மறுவாழ்வு துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

திட்ட அமலாக்க முகமையின், திட்ட இயக்குநர் பொறுப்பை வழக்கம்போல் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளர்.அரசு செயலர் விக்ரந்த்ராஜாவுக்கு, மின் துறை, நகர அமைப்பு, வீட்டுவசதி வாரியம் வழங்கப்பட்டதுடன், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி தலைமை செயலாக்க அதிகாரி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வகித்து வந்த பொதுப்பணித் துறை, சுற்றுலாவை வழக்கம்போல் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகரியான மலர்கண்ணன் அரசு சிறப்பு செயலராக அறிவிக்கப்பட்டு, கூட்டுறவு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X