பொது செய்தி

இந்தியா

தீபாவளியன்று புதுச்சேரியில் ஒலி, காற்று மாசு மிகவும் மோசம்; மாசு கட்டுப்பாட்டு குழும ஆய்வில் பகீர்

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தீபாவளியன்று புதுச்சேரியில் ஒலி, காற்று மாசு மிகவும் மோசமாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுற்றுப்புற காற்று மற்றும் ஒலி மாசினை கண்டறிய தீபாவளிக்கு முந்தைய 28ம் தேதி மற்றும் தீபாவளி பண்டிகை


புதுச்சேரி : தீபாவளியன்று புதுச்சேரியில் ஒலி, காற்று மாசு மிகவும் மோசமாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுற்றுப்புற காற்று மற்றும் ஒலி மாசினை கண்டறிய தீபாவளிக்கு முந்தைய 28ம் தேதி மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் (4ம் தேதி) வெடிக்கப்படும் வெடிகளால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்தது.

ஒலி மாசு புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை உள்ளிட்ட இரண்டு இடங்களிலும், காரைக்காலில் கோவில்பத்து பகுதியில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை 12 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது.ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முந்தைய நாளை விட, தீபாவளியன்று முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை பகுதியில் 18.3 சதவீதம் மற்றும் 25.5 சதவீதம், காரைக்காலில் 28.7 சதவீதம் அதிகரித்துள்ளது.தீபாவளியன்று பட்டாசு வெடித்தது, வாகன போக்குவரத்து, பிற செயல்களினால் ஒலிமாசு அதிகரித்துள்ளது.காற்று தரம்இதேபோல் தீபாவளியன்று காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் சோதனை புதுச்சேரியில் நைனார்மண்டபம், முதலியார்பேட்டை, அண்ணா நகர் பகுதிகளிலும், காரைக்காலில்

கோவில்பத்து பகுதியில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது.இதில் புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளை விட தீபாவளியன்று நுண்துகள்கள் அளவு அதிகமாக காணப்பட்டது.காரைக்காலில் சற்று குறைந்துள்ளது.சராசரி நுண்துகள்களின் அளவு, முந்தைய நாளை விட தீபாவளியன்று 158 சதவீதம் மற்றும் 149 சதவீதம் அதிகரித்துள்ளது. காரைக்காலில் நுண்துகள்களின் அளவு 7.5 சதவீதம் குறைந்துள்ளது.

24 மணி நேர சராசரிய ஆய்வில் கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருந்தது. இறுதி ஆய்வறிக்கையின்படி ஒலி மாசு தீபாவளிக்கு முந்தைய நாளை விட தீபாவளியன்று ஒப்பிடுகையில் புதுச்சேரியில் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.இதேபோல் தீபாவளியன்று காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான வகையில் இருந்தது. காரைக்காலில் திருப்திகரமான வகையில் இருந்தது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X