வீடூர் அணையிலிருந்து .உபரி நீர் வெளியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடூர் அணையிலிருந்து .உபரி நீர் வெளியேற்றம்

Added : நவ 14, 2021
Share
விக்கிரவாண்டி, : வீடூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 10:00 மணியளவில் வினாடிக்கு 3500 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32 அடி) 485.56 மில்லியன் கன அடியாக (30.475 அடி) நீர் மட்டம் உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 5

விக்கிரவாண்டி, : வீடூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 10:00 மணியளவில் வினாடிக்கு 3500 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32 அடி) 485.56 மில்லியன் கன அடியாக (30.475 அடி) நீர் மட்டம் உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 5 கதவுகளை திறந்து 3,500 கனஅடி உபரி நீரை வெளியேற்றினர்.அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X