பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நேற்று நீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 32 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58ம் கால்வாய் திட்டம் துவக்கப்பட்டது. வைகை அணை நீர் மட்டம் 67 அடி உயரும் போது இக்கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வழங்கப்படும். அணை நீர் மட்டம் 69.29
 வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்  வழியாக பாசனத்திற்கு தண்ணீர்  திறப்பு

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நேற்று நீர் திறந்து விடப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 32 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58ம் கால்வாய் திட்டம் துவக்கப்பட்டது. வைகை அணை நீர் மட்டம் 67 அடி உயரும் போது இக்கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வழங்கப்படும்.

அணை நீர் மட்டம் 69.29 அடியாக உயர்ந்ததால் (மொத்த உயரம் 71 அடி) விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நேற்று காலை 8:30 மணிக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1912 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர் பாசன வசதி பெறும்.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பலன்பெறுவர்.35 கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும். நீர் திறப்பில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர்கள் அனீஷ்சேகர் (மதுரை), விசாகன் (திண்டுக்கல்), முரளிதரன் (தேனி), எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன்(ஆண்டிபட்டி), சரவணகுமார்(பெரியகுளம்), வெங்கடேசன் (சோழவந்தான்), பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கால்வாய் வழியாக ஒரு மாதத்திற்கு நீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X