சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டூடியோ கம்ப்யூட்டர்களை தாக்கும் 'ரேன்சம்வேர்' வைரஸ்: தேனி சைபர்கிரைம் போலீசில் புகார்

Added : நவ 14, 2021
Share
Advertisement
தேனி:தேனியில் போட்டோ ஸ்டூடியோக்களில் உள்ள கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 'பைல்'களை தாக்கும் 'ரேன்சம்வேர்' வைரஸ் பாதிப்பால், உரிமையாளர்கள் வீடியோ, போட்டோ பதிவுகளை இழந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.தேனி சேல்ஸ் சொசைட்டித் தெரு சிவக்குமார் 50. பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியை சேர்ந்த சரவணன் 51. ஸ்டூடியோ உரிமையாளர்கள். இவர்களது ஸ்டுடியோ கம்ப்யூட்டர்களில்

தேனி:தேனியில் போட்டோ ஸ்டூடியோக்களில் உள்ள கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 'பைல்'களை தாக்கும் 'ரேன்சம்வேர்' வைரஸ் பாதிப்பால், உரிமையாளர்கள் வீடியோ, போட்டோ பதிவுகளை இழந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தேனி சேல்ஸ் சொசைட்டித் தெரு சிவக்குமார் 50. பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியை சேர்ந்த சரவணன் 51. ஸ்டூடியோ உரிமையாளர்கள். இவர்களது ஸ்டுடியோ கம்ப்யூட்டர்களில் மென்பொருள் நிறுவனங்களிடம் வாங்காத 'போட்டோ ஷாப்', 'கோரல்', அடோப், சி.எஸ்., விண்டோஸ் உள்ளிட்ட 'சாப்ட்வேர்'களை 'பைரேட்டடு' (திருட்டுத்தனமாக) முறையில் பதிவிறக்கும் செய்து பயன்படுத்தினர்.

அந்த கம்ப்யூட்டர்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட அப்ளிகேஷன்ஸ் போல்டர்களில் 'ரேன்சம்வேர்' வைரஸ் தாக்கியது. இதனால் உரிமையாளர்கள் சேமித்துள்ள போட்டோ, திருமணம் ஆல்ப வீடியோக்களை எடுக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்தனர். வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என இருவரும் தேனி சைபர் கிரைம் போலீசில் ஆன்-லைனில் புகார் அளித்தனர்.
எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் கூறியதாவது: இந்த வைரஸ் தாக்கியதும், கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு அப்ளிகேஷன் 'பைல்'களிலும் வேர்டு பைல் தொற்றிக் கொள்ளும். அந்த டெக்ஸ்ட் பைலை திறந்தால் ஐ.டி., கொடுக்கப்பட்டிருக்கும். நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டால், 999 பிட் காயின் மதிப்பில் பணம் செலுத்தினால், ரேன்சம்வேர் வைரசை விலக்கிக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கும். 999 பிட் காயின் மதிப்பு ரூ.47,57,633. இந்தத் தொகையையும் செலுத்த முடியாமல், கம்ப்யூட்டரையும் ஆன் செய்ய முடியாமல் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.

இதனை தவிர்க்க ஆன்ட்டி வைரஸ் பதிவேற்றம் செய்வதுடன், மென்பொருள்களை முறைப்படி நிறுவனத்திடம் பெற்று பயன்படுத்தினால் இதனை தவிர்க்கலாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X