பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை நீர் திறப்பு குறைப்பு எதிரொலி 142 அடியை எட்டுமா நீர்மட்டம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து அதிகபட்சமாக 138.85 அடியை எட்டியது. அதன்பின் மழை குறைந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி தமிழகபகுதிக்கு வினாடிக்கு 556 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தும் 556 கனஅடியாக இருந்த நிலையில், அதன்பின்
 பெரியாறு அணை நீர் திறப்பு குறைப்பு எதிரொலி  142 அடியை எட்டுமா நீர்மட்டம்

கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து அதிகபட்சமாக 138.85 அடியை எட்டியது. அதன்பின் மழை குறைந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.

நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி தமிழகபகுதிக்கு வினாடிக்கு 556 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தும் 556 கனஅடியாக இருந்த நிலையில், அதன்பின் பெய்த மழையால் நேற்று மதியம் 3:00 மணிக்கு நீர் வரத்து 4056 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் சற்று உயர்ந்து 139.35 அடியில்இருந்து 139.55 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 6962 மில்லியன் கன அடியாகும்.

தேக்கடியில் 4.4 மி.மீ., பெரியாறில் 3.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பில் அவ்வப்போது பெய்யும் மழையால் நீர் திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்ட கால அட்டவணைப்படி (ரூல் கர்வ்) நவ.30 க்குள் அணை நீர் மட்டம் 142 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்களில் 48 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X