பொது செய்தி

இந்தியா

ஆல் நியூ செலரியோ கார் அறிமுகம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் இ.சி.ஆர். கிரீன் கார்டனில் உள்ள மாருதி சுசுக்கி அரினா செண்பகா கார்ஸில் ஆல் நியூ செலரியோ கார் அறிமுக விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.செண்பகா காரின் நிர்வாக இயக்குனர் அசோகன், இயக்குனர் சரவணன், பொது மேலாளர் ராஜசேகரன், நிர்வாக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து
 ஆல் நியூ செலரியோ கார் அறிமுகம்

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் இ.சி.ஆர். கிரீன் கார்டனில் உள்ள மாருதி சுசுக்கி அரினா செண்பகா கார்ஸில் ஆல் நியூ செலரியோ கார் அறிமுக விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

செண்பகா காரின் நிர்வாக இயக்குனர் அசோகன், இயக்குனர் சரவணன், பொது மேலாளர் ராஜசேகரன், நிர்வாக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செலரியோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் பிரத்யேக வடிவமைப்பு, ஆட்டோ கியர் ஷிப்ட் உள்ளிட்ட அம்சங்களுக்காக பெரிதும் விரும்பப்படும் மாடலாக விளங்கி வருகிறது.

முந்தைய செலரியோ போல் அல்லாமல் இந்த புதிய ஆல் நியூ செலரியோவின் டிசைன், தோற்றம், இன்ஜின், அம்சங்கள் என பலவற்றிலும் மாறுதல் கண்டு வெளிவந்துள்ளது.இந்தியாவில் முதல் முறையாக அதிக மைலேஜாக 26.68 கி.மீ., லிட்டருக்கு தரக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய செலரியோவைவிட 40 சதவீத இடவசதியும் 313 லிட்டர் பூட் ஸ்பேஸ், அதிகப்படியான லெக் ரூம் கிடைக்கின்றது.

ஸ்டார்ட் - ஸ்டாப் இயக்கத்துக் கென பொத்தான் வசதி உள்ளது.மின்சாரத்தில் செயல்படும் ரியர் வியூ மிரர், 17.78 செ.மீ.,தொடு திரை, காரின் கவர்ச்சியான தோற்றத்தை மெலும் மெருகேற்றும் வகையில் 15 இன்சிலான அலாய் வீல், உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.மேலும் 12க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மிகவும் பாதுகாப்பான காராக உள்ளது.

இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் கூடிய நியூ ஆல் செலரியோ எக்ஸ் ேஷாரூம் விலையாக 4,98,948 ரூபாயில் கிடைக்கின்றது. கார் புக்கிங்கிற்கு 8220099993 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X