பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ஐ.டி., நிறுவனம் வெங்கடேசன் எம்.எல்.ஏ., யோசனை

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களை அழைத்து பேசி, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொடர் மழையால் சென்னை ஐ.டி., நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளன.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி புதுச்சேரி அரசு, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள ஐ.டி., நிறுவனங்களை

புதுச்சேரி : சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களை அழைத்து பேசி, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொடர் மழையால் சென்னை ஐ.டி., நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளன.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி புதுச்சேரி அரசு, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள ஐ.டி., நிறுவனங்களை அழைத்து, புதுச்சேரியில் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.புதுச்சேரியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொறியியல், கணினி உள்ளிட்ட உயர் கல்வி படித்த மாணவ, மாணவிகள் இளைஞர்கள், இளம்பெண்கள் என, பலரும் சென்னை போன்ற பெருநகரங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.அதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி போன்ற பாதுகாப்பான நகரில் பெரிய ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைத்தால், நமது மாநிலத்தில் நிச்சயம் ஓர் தொழில் புரட்சி ஏற்படும்.இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய வருவாயும் கிடைக்கக்கூடும். அதே சமயத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு குறிப்பாக பொறியியல், கணினி உள்ளிட்ட உயர் படிப்புகளை படித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.எந்த ஒரு இயற்கை பேரிடர் சமயத்திலும்

இது போன்ற நிறுவனங்களுக்கு புதுச்சேரி ஒரு பாதுகாப்பான நகரம் என்பதில் துளியும் ஐயமில்லை. இதுபோன்ற இயற்கை பேரிடர் சமயத்தில், புதுச்சேரி அரசு, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மூலம், சென்னையில் உள்ள பெரிய நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கார்ப்பரேட் நிறுவன மற்றும் ஐடி நிறுவன அதிகாரிகளின் முக்கிய கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.முக்கியமாக, கவர்னர், முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X