சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியை புரட்டி போட்ட மழை: வெள்ளக்காடான கிராமங்கள் இரவு பகலாக நடைபெற்றது மீட்பு பணி

Added : நவ 14, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தை மழை புரட்டி போட்டது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நவ.11 முதல் மழை வலுத்தது. பகலில் லேசாக ஒய்ந்திருக்கும் மழை இரவில் கொட்டி தீர்க்கிறது. நேற்று பகலிலும் மழை நீடித்தது. இரண்டு மாதங்களாக

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தை மழை புரட்டி போட்டது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நவ.11 முதல் மழை வலுத்தது. பகலில் லேசாக ஒய்ந்திருக்கும் மழை இரவில் கொட்டி தீர்க்கிறது. நேற்று பகலிலும் மழை நீடித்தது. இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளங்கள் நிரம்பிய நிலையில் கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழைக்கு குளங்கள் உடைபெடுக்க தொடங்கியுள்ளது.

சுசீந்திரம் பழையாறு பகுதியில் உள்ள நான்கு குளங்கள் உடைப்பெடுத்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நாகர்கோவில் - திருநெல்வேலி ரோட்டில் ஒழுகினேசேரியில் தண்ணீர் ஓடியதால் நள்ளிரவு 12:00 முதல் நேற்று இரவு வரையிலும் இந்த பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.


150 கிராமங்கள்


மலையோர பகுதிகள், அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், அணைகளுக்கு வரும் தண்ணீரில் பெரும்பகுதி உபரி நீராக திறந்து விடப்படுவதாலும் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணியாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.தேரகோல்புதுார், புதுகிராமம், தோவாளை, தெரிசனங்கோப்பு, அருமநல்லுார், நாவல்காடு, புரவசேரி, செண்பகராமன்புதுார், இறச்சக்குளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், தென்தாமரைகுளம், தக்கலை, முத்தலக்கறிச்சி, முட்டைக்காடு, திருவட்டார், குலசேகரம், புங்கறை, கோழிப்போர்விளை, புதுக்கடை, அதங்கோடு, முஞ்சிறை, பார்த்திபபுரம், வைக்கல்லுார் உட்பட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை போலீசார் ,தீயணைப்புத்துறையினர் இரவு பகலாக மீட்டுமுகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


யில்சேவை பாதிப்பு

மழையால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் பாதையில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்க பட்டது. இரணியல்- குழித்துறை இடையே மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இரணியல் ரயில் நிலையம் தண்டவாளம் தெரியாத அளவு தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். மண்சரிவை சரி செய்யும் நடவடிக்கையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயில் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டு கன்னியாகுமரி செல்லும் பயணிகள் பஸ்சில் ஏற்றி அனுப்பட்டனர்.போக்குவரத்து பாதிப்புரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களிலும் ரோடுகள் துண்டிக்கப் பட்டது. ஒழுகினசேரி வழியாக திருநெல்வேலி செல்லும் பஸ்கள் அஞ்சுகிராமம் வழியாக திருப்பி விடப்பட்டது. பூதப்பாண்டி வழியாக செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. வில்லுக்குறி அருகே குதிரைபந்திவிளையில் ரோடு உடைப்பு எடுத்ததால் இந்த ரோட்டில் பஸ்கள் செல்லவில்லை.


42 ஆயிரம் கன அடி திறப்பு


பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நேற்று மாலை வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில் வெளியேற்றப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டால் கல்குளம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் தாலுகா மிக அதிகமாக பாதிக்கப்படும்


பார்வை


அமைச்சர் மனோதங்கராஜ், அரசின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி
நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.பின்னர் நிருபர்களிடம் கூறிய அமைச்சர் மனோதங்கராஜ், பேரிடர் மீட்புக் குழுவின் 200 வீரர்கள் வர உள்ளதாகவும், அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிர் ஆபத்து ஏற்படவில்லை, என் தெரிவித்தார்.

ஆறு தாலுகாக்களிலும் 36 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 1800 பேர் தங்க வைக்கப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை போன்ற வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. நேற்று பகல் முழுவதும் மழை நீடித்ததால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X