பொது செய்தி

இந்தியா

மொரட்டாண்டி கோவிலில் 12 அடி உயர குரு பகவான் சிலை

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், 12 அடி உயர குரு பகவான் சிலை உள்ளது. இங்கு, குரு பகவான் நேற்று மாலை 6:21 மணிக்கு மகர ராசியில் இருந்து, கும்பம் ராசிக்கு பிரவேசிக்கும், குருப்பெயர்ச்சி விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று மகா யாகம் மற்றும் லட்ச்சார்ச்சனை நடந்தது.காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், 1,008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30
 மொரட்டாண்டி கோவிலில்  12 அடி உயர குரு பகவான் சிலை

புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், 12 அடி உயர குரு பகவான் சிலை உள்ளது. இங்கு, குரு பகவான் நேற்று மாலை 6:21 மணிக்கு மகர ராசியில் இருந்து, கும்பம் ராசிக்கு பிரவேசிக்கும், குருப்பெயர்ச்சி விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று மகா யாகம் மற்றும் லட்ச்சார்ச்சனை நடந்தது.காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், 1,008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30 விதமான அபிேஷகம் நடந்தது.காலை 10:00 மணிக்கு குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், மகா பூர்ணஹூதி, ராசி பரிகார ஹோமம், 1,008 லிட்டர் பால் அபிேஷகமும், மாலை 3:00 மணிக்கு கலச அபிேஷகம் நடந்தது. சரியாக மாலை 6:21 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சிதம்பரம் குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X