கோமாரி நோய் கால்நடைகளுக்கு வீடுகளில் முதலுதவி ஆலோசனை

Added : நவ 14, 2021
Advertisement
செஞ்சி : கோமாரி நோய் தாக்கிய கால்நடைகளுக்கு வீடுகளில் மருந்து தயாரித்து சிகிச்சையளிக்கும் முறையை கால்நடைத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.விழுப்புரம் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், மற்றும் திண்டிவனம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோரது செய்திக்குறிப்பு:கால்நடைகளின் வாயில் கொப்பளத்துடன் எச்சில் சுரப்பு அதிகரித்தும்,

செஞ்சி : கோமாரி நோய் தாக்கிய கால்நடைகளுக்கு வீடுகளில் மருந்து தயாரித்து சிகிச்சையளிக்கும் முறையை கால்நடைத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.விழுப்புரம் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், மற்றும் திண்டிவனம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோரது செய்திக்குறிப்பு:

கால்நடைகளின் வாயில் கொப்பளத்துடன் எச்சில் சுரப்பு அதிகரித்தும், உணவு உண்ண முடியாமல் இருப்பது, குளம்புகளில் கொப்பளங்கள் காணப்படுவதும் கோமாரி நோய்க்கான அறிகுறி. இதற்கு வீட்டில் மருந்து தயாரித்து சிகிச்சையளிக்க வேண்டும். தலா 10 கிராம் சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து வைத்து கொள்ளவும்.பிறகு 10 கிராம் மஞ்சள் துாள், 4 பல் பூண்டு, 100 கிராம் வெல்லத்தை அறைத்து 10 கிராம் தேங்காய் துருவல் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கையினால் பிசைந்து நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் 5 நாள் வாய் வழியே கொடுத்து வந்தால் கோமாரி நோய் குணமாகும்.

3இதேபோல் மேல் பூச்சுக்கு பத்து பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் துாளுடன், தலா 10 துளசி இலை, குப்பைமேனி, வேப்பிலை, மருதாணி ஆகியவற்றை சேர்ந்து ஒன்றாக அறைத்து, அதை 1 லிட்டர் சுத்தமான நல்லெண்ணையில் கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். இந்த மருந்தை புண் உள்ள இடங்களில் புண் ஆறும் வரை தொடர்ந்து தடவி வரவேண்டும்.குளம்புகளுக்கு இடையே ரத்தக் கசிவுடன் கூடிய புண் மற்றும் புழுக்கள் இருக்கும். புழுக்களை நீக்கி சுத்தம் செய்த பின் மருந்து தடவினால் நோய் குணமாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X