பொது செய்தி

தமிழ்நாடு

கால்பந்து வீரர்களுக்கு எம்.எல்.ஏ., உதவி

Added : நவ 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ள, வீரர்களுக்கு பயண செலவு தொகையை எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் வழங்கினார்.கரூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் விழுப்புரம் மாஸ்டர் கால்பந்து அணி சார்பில், 11 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் அகில இந்திய அளவில் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நேபாலில் நடைபெறவுள்ள
 கால்பந்து வீரர்களுக்கு எம்.எல்.ஏ., உதவி

விழுப்புரம் : கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ள, வீரர்களுக்கு பயண செலவு தொகையை எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் வழங்கினார்.கரூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் விழுப்புரம் மாஸ்டர் கால்பந்து அணி சார்பில், 11 வீரர்கள் பங்கேற்றனர்.

இவர்கள், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் அகில இந்திய அளவில் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நேபாலில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர்.இந்த வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்கள் போட்டிக்குச் சென்று வருவதற்கான பயண செலவாக, விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் மற்றும் முன்னாள் சேர்மன் ஜனகராஜ், தி.மு.க., மாநில விவசாய பிரிவு சிவா, வழக்கறிஞர் நாகராஜ், நகர செயலாளர் சக்கரை,

முன்னாள் கவுன்சிலர் மணவாளன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி கேசவன், இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மொத்தம் 2 லட்சம் ரூபாய் வழங்கினர். விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பயிற்சியாளர்கள் தண்டபாணி, ஜேம்ஸ் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X