இது உங்கள் இடம்: இதெல்லாம் ஒரு பிழைப்பா!

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (149) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:திராவிட கொள்கையுடையோர், திருவள்ளுவரை முதலில் சமணர் என்றனர்; பின், பவுத்தர் என்றனர். அது ஏற்கப்படவில்லை என்பதால், பல நுாற்றாண்டுகளாக திருவள்ளுவர் உருவத்தில் இருந்து வந்த ஹிந்து அடையாளத்தை அழித்தனர்.திருக்குறளில்
இது, உங்கள் இடம், திருக்குறள், திருவள்ளுவர்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

திராவிட கொள்கையுடையோர், திருவள்ளுவரை முதலில் சமணர் என்றனர்; பின், பவுத்தர் என்றனர். அது ஏற்கப்படவில்லை என்பதால், பல நுாற்றாண்டுகளாக திருவள்ளுவர் உருவத்தில் இருந்து வந்த ஹிந்து அடையாளத்தை அழித்தனர்.

திருக்குறளில் மிகுந்துள்ள ஹிந்து ஆன்மிக கருத்துக்களை, 'திராவிட மேதை'கள் வடிகட்டி, அவர்கள் விருப்பப்படி பகுத்தறிவுப் பொருளுரை எழுதி, செயற்கையான மதச்சார்பின்மையை புகுத்தினர்.இதை தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மிக அறிவுடைய ஹிந்துக்கள், நீண்ட காலம் கண்டுகொள்ளாமல் இருந்ததால், இன்று ஒருபடி மேலே போய், 'திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்' என்கின்றனர்.கருத்து சுதந்திரம் என்ற பெயரில், புத்தகங்கள் போட்டு பொய்யுரை பரப்புகின்றனர்.

இதையும் மவுனமாக சகித்துக் கொண்டால் நாளைய தலைமுறை, 'திருவள்ளுவர் ஹிந்து இல்லை' என்ற அபத்தமான முடிவுக்கு வந்து விடுவர்; அதுவே வரலாற்றில் பதிவாகி விடும். திருவள்ளுவர், ஹிந்து மத ஞானி தான் என்பதற்கான பல ஆதாரங்களின் பட்டியல் இதோ:திருக்குறளில் திருமால், திருமகள், பிரம்மா, சிவன், இந்திரன், எமன், மன்மதன், பூமா தேவி ஆகிய ஹிந்துக்கள் மட்டுமே வழிபடும் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

தேவர், வேதம், ஊழ்வினை, இருவினை, ஏழு ஜென்மம், தவம், வேள்வி, மந்திரம், நோன்பு, தென்புலத்தார், திதி, அந்தணர், புலால் மறுத்தல், நீத்தார், பிறவாமை, நிலையாமை போன்ற இந்து மதத்தினர் நம்பும், அனுசரிக்கும் விஷயங்கள் இருக்கின்றன.ஹிந்து மத அடிப்படைக் கொள்கைகளான, 'மறுபிறவி, வினைப்பயன்' ஆகிய இரண்டும் திருக்குறளில் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றன.

தர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், காம சாஸ்திரம் ஆகிய சமஸ்கிருத நுால்களின் சாராம்சமே, திருக்குறளில் முறையே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆக உருவெடுத்தன என்பது, அறிஞர்கள் ஆய்ந்து அறிந்த உண்மை.கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் போன்ற அதிகாரங்களிலும், ஹிந்து கருத்துக்களை வள்ளுவர் தெளிவாக விதைத்திருக்கிறார்.


latest tamil news


சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபட்டு வருவோர், ஹிந்துக்களே. அங்கு வீற்றிருக்கும் 14-ம் நுாற்றாண்டு சிலை தான், விபூதி பட்டையும், ருத்திராட்ச மாலையும் அணிந்த வள்ளுவர் உருவத்திற்கு முன் மாதிரியானது.மயிலை அறுபத்து மூவர் உற்சவத்தின்போது, 64வது நாயன்மாராக திருவள்ளுவரையும் ஊர்வலத்தில் சேர்த்து ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

ஒரு உண்மையான ஹிந்துவால் 1,330 குறள்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மறுபிறவி, வினைப்பயன், பல தெய்வ தத்துவம் போன்ற கருத்துக்கள் உள்ளடக்கிய திருக்குறளை பிற மதங்களில் நம்பிக்கை உள்ளோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திருக்குறளில் பரவிக் கிடைக்கும் ஹிந்து கருத்துக்களை ஜீரணிக்க முடியாத, ஈ.வெ.ரா., அந்நுாலை மிகக் கேவலமாக விமர்சித்தார். அற்ப புத்தியுள்ள சிலர் திருக்குறளை, 'மதச்சார்பின்மை போர்வை'யில் திருத்துவதும், திரிப்பதும் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். மத வியாபாரிகளிடம் வாங்கிய பணத்திற்காக அவர்கள் கூவுகின்றனர்; அவ்வளவு தான்!

Advertisement
வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI,இந்தியா
18-நவ-202113:14:20 IST Report Abuse
KMP We started the unnecessary debate on which religion Valluvar belongs to instead of following the thirukkurals. It is common for all human beings not belonging to any religion.
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
15-நவ-202118:31:07 IST Report Abuse
Raja வேதாகமம் ஒன்றை தவிர வேறு எந்த ஒரு நூலையும் அதற்கு இணையாக ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஏற்று கொள்ள மாட்டான். திருமா போன்ற அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் வேண்டும் என்றால் இப்படி பேசலாம். இப்படி பட்டவர்களை எல்லா தரப்பு மக்களும் நிராகரிக்க வேண்டும். திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவம் மேன்மை அடைவதோ, அவர் கிறிஸ்தவர் இல்லாவிட்டால் குறைவைடைய போவதோ இல்லை. இப்படி தேவை இல்லாத காரியங்களை விவாத பொருளாக்கி தங்கள் இருப்பை நிலை நாட்டை நினைப்பவர்களை பார்த்தால் வேதனையாக உள்ளது.
Rate this:
Cancel
Thirumal s S - Gulbarga,இந்தியா
14-நவ-202122:44:00 IST Report Abuse
Thirumal s S அப்ப ஆரியர்களும் இந்துக்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X