இந்தியா

தமிழக பா.ஜ., தலைவர்

Added : நவ 14, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது. மாலை 6.21 மணிக்கு குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசம் செய்தார்.இதையொட்டி, குருபகவானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. துணை
 தமிழக பா.ஜ., தலைவர்

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது. மாலை 6.21 மணிக்கு குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசம் செய்தார்.இதையொட்டி, குருபகவானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இரவு 8.30 மணிக்கு மூலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின், கோவிலின் வரலாறு, சிறப்புகள் குறித்தும், கோவிலின் தற்போதைய நிலை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்றார்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், செயலர் காத்தவராயன், பொருளாளர் பிரபு, துணை தலைவர் சக்திவேல், உறுப்பினர் முத்துக்கண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X