சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் மோதி படகு மூழ்கியது: மீனவர்கள் தப்பினர்

Added : நவ 14, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் மீது விசைப்படகு மோதி மூழ்கியது. இதில் இருந்த 5 மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் மீட்டனர்.வடகிழக்கு பருவ மழை சீசனில் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க மண்டபம் தென் கடற்கரையில் இருந்து அம்சத்கான் என்பவரது விசைப்படகில் 4 மீனவர்கள் நேற்று மாலை மூடி கிடந்த பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது
 பாம்பன் பாலத்தில் மோதி படகு மூழ்கியது: மீனவர்கள் தப்பினர்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் மீது விசைப்படகு மோதி மூழ்கியது. இதில் இருந்த 5 மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் மீட்டனர்.

வடகிழக்கு பருவ மழை சீசனில் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க மண்டபம் தென் கடற்கரையில் இருந்து அம்சத்கான் என்பவரது விசைப்படகில் 4 மீனவர்கள் நேற்று மாலை மூடி கிடந்த பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது படகின் டிரைவர் அறை துாக்கு பாலம் மீது மோதி சேதமடைந்து, படகின் 'சர்க்கி'(ஸ்டேரிங்) உடைந்து கட்டுபாட்டை இழந்தது.

இதனால் படகு திசைமாறி புதிய ரயில் பாலத்திற்கு அமைத்த துாண்கள் மீது மோதியதால், படகின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்தது. படகு மெல்ல மூழ்க துவங்கி, கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப படகு இழுத்து செல்லப்பட்டது. பாம்பன் தெற்கு கடற்கரையில் நிறுத்தி இருந்த படகுகள் அருகில் முழுவதுமாக மூழ்கியது. இப்படகில் இருந்த 5 மீனவர்களையும், பாம்பன் நாட்டுபடகு மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X