திருவாரூர்:''விவசாயிகளை கண்ணைபோல பாதுகாப் போம்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், சேதத்தை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வருகிருறோம். பெரும் சேதம்கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் வரை பார்வையிட்டுள்ளேன்.
விவசாயிகளின் கருத்துக்கள், உணர்வுகளை கேட்டு தெரிந்து கொண்டேன். பயிர்சேதம் அடைந்த விவசாயிகளுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும். பயிர்களை காப்பாற்ற முடியாத இடங்களில், விவசாயிகள் மறு நடவு செய்ய அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஆட்சிக்கு வந்தவுடன், டெல்டா மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை புரிந்துகொண்டு, 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 ஆயிரம் கி.மீ., துாரம் தூர்வாரப்பட்டுள்ளது.
விவசாயிகளை கண்போல பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில்,400 இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தது. இதை விரைவாக அகற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சி செயல்படாத காரரணத்தால்தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு மாதத்தில், தி.மு.க., அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களையும், வெள்ள பாதிப்பிலிருந்து மீட்க நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.முன்னதாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.கடலுார் மாவட்டத்தில், மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்றார். அங்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான நிதி உதவிகளை வழங்கினார். இரவில் ஆய்வுபின், ஆடூர் அகரம் பகுதியில் மழை நீரில் மூழ்கி பாதித்த விளை நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
நாகை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த விளை நிலங்களை பார்வையிட்ட ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. பெரிய கோட்டை கிராமத்தில் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை, நேற்று இரவு 7:00 மணிஅளவில் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கையில் எடுத்து, முதல்வரிடம் காண்பித்தனர். அவர்களிடம் பயிர் பாதிப்பின் நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா புதுார் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய சம்பா சாகுபடி பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது குறித்தும், 41 கால்நடைகள் உயிரிழந்தது, 90க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கபட்டது குறித்து காட்சி படுத்தபட்டிருந்ததை முதல்வர் பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE