பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்: மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

Added : நவ 14, 2021
Share
Advertisement
சிவகங்கை:தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் மூலம் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.வடகிழக்கு பருவ மழையால் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி

சிவகங்கை:தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் மூலம் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவ மழையால் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்கிறது.மழை நீர் தேங்குவதின் மூலம் காய்ச்சல் பரவுவதை தவிர்க்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லுாரிகளும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தலா 20 காய்ச்சல் சிறப்பு முகாம் வீதம் என 25 கல்லுாரிகளும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் தலா 10 சிறப்பு முகாம்களும், பிற மருத்துவ நிறுவனங்களாக செயல்படும் 65 நிறுவனங்கள் தலா 6 முகாம்கள் வீதம் என மாநில அளவில் 1005 காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தி மழைக்கால நோய் தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X