விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை, பட்டாணி விலை அதிகரித்தும், உருட்டு உளுந்து பாமாயில் விலை குறைந்தும் காணப்படுகிறது.
இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.1000 அதிகரித்து ரூ.3200, பாமாயில் ரூ.40 குறைந்து ரூ.2010, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.100 அதிகரித்து ரூ.4800, 100 கிலோ சர்க்கரை ரூ.60 அதிகரித்து ரூ.3980, 90 கிலோ பை மைதா ரூ.3800, 55 கிலோ பொரிகடலை ரூ.4050, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.8400, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.9000, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.6500, உளுந்து லயன் ரூ.7700, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ.6800, பாசிப்பயறு லயன் பருவட்டு ரூ.9200க்கு விற்கப்படுகிறது.
பாசிப்பயறு இந்தியா பருவட்டு ரூ.8500, மசூர் பருப்பு பருவட்டு ரூ.9200, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.200 குறைந்து ரூ.10,600, பர்மா வகை ரூ.8500, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.9000, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.100 அதிகரித்து ரூ.9000, பட்டாணி பருப்பு ரூ.50 அதிகரித்து ரூ.7000, வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ,.200 அதிகரித்து ரூ.7700, நாட்டு வத்தல் வரத்து இல்லை. ஆந்திரா ஏ.சி., வத்தல் குவிண்டாலுக்கு ரூ.12,000 -- 12,500, மல்லி நாடு 40 கிலோ ரூ.3500 முதல் 4000க்கு விற்கப்படுகிறது.
வியாபாரிகள் கூறுகையில், 'கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்டு வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்றும் அதே நோய் அச்ச சூழலில் தான் உள்ளன. இதனால் பொருளாதார சக்கரம் இன்னும் மீள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மார்க்கெட் விலையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது, என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE