சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை தாசில்தார் வீட்டில் 'ரெய்டு' ரூ.5.30 லட்சம் பறிமுதல்

Added : நவ 14, 2021
Share
Advertisement
ஈரோடு:லஞ்ச புகாரில் சிக்கிய மண்டல துணை தாசில்தார் வீட்டில் நடத்திய சோதனையில், 5.30 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மூவர் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கூடக்கரையைச் சேர்ந்தவர் ரத்தினசாமி, 50; தனக்கு சொந்தமான, 87 சென்ட் நிலத்துக்கு, உண்மைத்தன்மை மற்றும் தடையின்மை சான்று கேட்டு நம்பியூர் தாலுகா அலுவலகத்தை அணுகினார். வருவாய்த்

ஈரோடு:லஞ்ச புகாரில் சிக்கிய மண்டல துணை தாசில்தார் வீட்டில் நடத்திய சோதனையில், 5.30 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கூடக்கரையைச் சேர்ந்தவர் ரத்தினசாமி, 50; தனக்கு சொந்தமான, 87 சென்ட் நிலத்துக்கு, உண்மைத்தன்மை மற்றும் தடையின்மை சான்று கேட்டு நம்பியூர் தாலுகா அலுவலகத்தை அணுகினார். வருவாய்த் துறை அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

இதுகுறித்து ரத்தினசாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.தொடர்ந்து, 20 ஆயிரம் ரூபாயை எலத்துார் வி.ஏ.ஓ., ராம்ஜி, புரோக்கர்முத்துக்குமாரிடம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். சிக்கிய இருவரிடம் விசாரித்ததில், மண்டல துணை தாசில்தார் அழகேசன் வழிகாட்டுதலில், லஞ்சம் வாங்கியது தெரிந்தது.
இதையடுத்து நம்பியூர் தாலுகா 'ஆபீசில்' லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை நடத்தினர். மண்டல துணை தாசில்தார் அழகேசன் உட்பட மூவரிடம், நேற்று அதிகாலை 2:00 மணி வரை, விசாரணை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின் அவர்களை கைது செய்தனர்.
மண்டல துணை தாசில்தார் அழகேசன் வசிக்கும் அந்தியூர் வீட்டிலும், கோபி, கரட்டடிபாளையத்தில், எலத்துார் வி.ஏ.ஓ., ராம்ஜி தங்கியிருந்த விடுதி அறையிலும், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறுகையில், 'மண்டல துணை தாசில்தார் அழகேசன் வீட்டில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 5.30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம்.

'வி.ஏ.ஓ., ராம்ஜி தங்கியிருந்த அறை மற்றும் அவரின் சொந்த ஊரான திண்டுக்கல்லிலும் சோதனை முடித்துள்ளோம். லஞ்சப்புகார் சம்பந்தமாக, தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் கைப்பற்றியுள்ளோம்' என்றனர்.


அதிகாரிக்கு 'நோட்டீஸ்'

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா, 57. இவர் வேலுார் கோட்டம் பொதுப் பணித் துறை தொழில் நுட்ப கல்வி துறையில், செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.இவரது அலுவலகம் வேலுார் தொரப்பாடியில், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ளது. ஷோபனா ஒப்பந்ததாரர்களிடம் அதிகமாக லஞ்சம்வாங்குவதாக புகார் வந்தது.
இதையடுத்து வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நவம்பர் 2, 3ல், அவரது அலுவலகம், ஓசூரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி கணக்கில் வராத 2.26 கோடி ரூபாய், 14 சொத்து பத்திரங்கள், 28 லட்சம் ரூபாய்க்கான வங்கி 'டிபாசிட்' பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், வேலுார் கோட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மாவட்டங்களில் நடந்த கட்டட பணிகளை எடுத்து செய்த, ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியது தெரிந்தது.இதையடுத்து ஷோபனா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது, 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.அவர் மீது, துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து கணக்கில் வராத, 2.26 கோடி ரூபாயை வைத்திருந்ததற்கு விளக்கம் கேட்டு பொதுப் பணித் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து, ஷோபனாவுக்கு நேற்று 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X