தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் சரோஜா தலைமறைவு?

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021
Share
Advertisement
நாமக்கல் : ''மோசடி வழக்கு பதிவு செய்த நாள் முதல், முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்,'' என, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகா கூறினார்.முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் குணசீலன், 65 என்பவர், சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தததாக, நாமக்கல் மாவட்ட
'மாஜி' அமைச்சர்  சரோஜா தலைமறைவு?


நாமக்கல் : ''மோசடி வழக்கு பதிவு செய்த நாள் முதல், முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்,'' என, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகா கூறினார்.முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் குணசீலன், 65 என்பவர், சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தததாக, நாமக்கல் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், 15 பேரிடம், 76.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, சரோஜா, லோகரஞ்சன் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முன் ஜாமின் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சரோஜாவும், அவரது கணவரும் மனு தாக்கல் செய்துஉள்ளனர்.
அந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.


latest tamil news




குற்றப்பிரிவு



இன்ஸ்பெக்டர் அம்பிகா கூறியதாவது:வழக்கு பதிவு செய்த நாள் முதல், முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். நாங்கள் விசாரணைக்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X