பொது செய்தி

தமிழ்நாடு

4 தலைமுறை கண்ட 132 வயது மூதாட்டி இறப்பு

Added : நவ 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேலங்குடியில் 4 தலைமுறை கண்ட 132 வயது மூதாட்டி இறந்தார்.தொண்டி அருகே வேலங்குடியை சேர்ந்தவர் 132 வயதான சந்தனம்மாள். இவரது கணவர் ஆரோக்கியசாமி, அதே கிராமத்தில் தோட்டக்காவலாளியாக வேலை பார்த்தார். இருவரும் ஓட்டு வீட்டில் வசித்தனர். இவர்களுக்கு மூன்று மகன்களும்,மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகன் விபத்தில் இறந்து விட்டார்.
 4 தலைமுறை கண்ட  132 வயது மூதாட்டி இறப்பு

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேலங்குடியில் 4 தலைமுறை கண்ட 132 வயது மூதாட்டி இறந்தார்.

தொண்டி அருகே வேலங்குடியை சேர்ந்தவர் 132 வயதான சந்தனம்மாள். இவரது கணவர் ஆரோக்கியசாமி, அதே கிராமத்தில் தோட்டக்காவலாளியாக வேலை பார்த்தார். இருவரும் ஓட்டு வீட்டில் வசித்தனர். இவர்களுக்கு மூன்று மகன்களும்,மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகன் விபத்தில் இறந்து விட்டார். ஆரோக்கியசாமி 1982 ல் இறந்தார்.

மற்றொரு மகனுடன் அதே வீட்டில் சந்தனம்மாள் வசித்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சந்தனம்மாள் நேற்று இறந்தார்.இவர் பேரன்,பேத்திகளுடன் நான்கு தலைமுறையாக வாழ்ந்துள்ளார். இவரது உடலுக்கு கொடிப்பங்கு ஊராட்சி தலைவர் சாந்தி ரவிச்சந்திரன், கிராமத்தினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X