புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் அமித்ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை| Dinamalar

இந்தியா

புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் அமித்ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

Added : நவ 14, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.புதுச்சேரியில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி, இதுவரை மரியாதை நிமித்தமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவில்லை.இந்நிலையில்,
 புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் அமித்ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.புதுச்சேரியில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி, இதுவரை மரியாதை நிமித்தமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவில்லை.இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலம், திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பங்கேற்கின்றனர்

.மாநாட்டில், தென்னிந் தியாவில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில், திருப்பதியில் தங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை 4:00 மணிக்கு திருப்பதிக்கு காரில் புறப்பட்டார். பின்னர் திருப்பதி தாஜ் ஓட்டலில் தங்கியுள்ள உள்துறை அமைச்சரை இரவு 9:00 மணிக்கு மரியாதை நிமித்தமாக சந்தித்து

பேசினார். அப்போது, புதுச்சேரி அரசுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, அரசின் கடனை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் உடனிருந்தார்.முன்னதாக நேற்று காலை 8:30 மணி அளவில் முதல்வர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார். அப்போது, தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாட்டில் வலியுறுத்த வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து கவர்னர் தமிழிசை, தென்னிந்திய மாநில முதல்வர்கள் பங்கேற்பதற்காக நேற்று காலை 10:30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து ஆந்திரா சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X