பண்ணைக்காடு--பண்ணைக்காடு பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தனியார் வாகனங்களை மெயின் ரோட்டில் நிறுத்துவது மட்டுமின்றி ஆலடிப்பட்டி மற்றும் ஊரல் பட்டியில் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து ஏராளமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதில் சாக்கடையும் ஆக்கிரமிக்கப்படுகிறது.துவக்கத்திலிருந்த ரோடு கட்டுமானங்களால் சுருங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டிய பேரூராட்சி கண்டுகொள்ளாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையும் ஆக்கிரமிப்பு குறித்து கண்டுகொண்டதாக தெரியவில்லை.தொடரும் ஆக்கிரமிப்பால் பண்ணைக்காடு பகுதியில் வாகனங்கள் சென்று வராத முடிய நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE