குடகனாறு அணையில் 25 அடி நீர்தேக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடகனாறு அணையில் 25 அடி நீர்தேக்க வலியுறுத்தல்

Added : நவ 14, 2021
Share
எரியோடு-'வேடசந்துார் குடகனாறு அணையில் 25 அடி நீர்தேக்க வேண்டும்' என, முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் வலியுறுத்தினார்.அவர் கூறியது:குடகனாறு அணையில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் 2 மாதத்திற்கும் மேலாக 25 அடி வரை நீர் தேக்கி வைக்கப்பட்டது. சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்தது. ஆழ்துளை கிணறுகளில் நீர் அதிகம் கிடைத்து விவசாயிகள் பயன்பெற்றனர்.விவசாய சங்கங்களின்

எரியோடு-'வேடசந்துார் குடகனாறு அணையில் 25 அடி நீர்தேக்க வேண்டும்' என, முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் வலியுறுத்தினார்.அவர் கூறியது:குடகனாறு அணையில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் 2 மாதத்திற்கும் மேலாக 25 அடி வரை நீர் தேக்கி வைக்கப்பட்டது. சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்தது. ஆழ்துளை கிணறுகளில் நீர் அதிகம் கிடைத்து விவசாயிகள் பயன்பெற்றனர்.விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று முந்தைய அரசில் ரூ.6 கோடி மதிப்பில் ஷட்டர்கள் வலுப்படுத்த ஒதுக்கப்பட்டது. அந்தப் பணிக்கு கடந்த ஜன.11ல் டெண்டர் விடப்பட்டு அணையில் நீர் அதிகம் இருந்ததால் பணி செய்ய முடியவில்லை. ஆட்சி மாற்றத்திற்குப்பின் அப்பணி முடிந்து ஷட்டர்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி 20 அடி மட்டும் தண்ணீர் தேக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷட்டர் வலுகுறைவாக இருந்தபோதே 2 மாதங்களுக்கு 25 அடி நீர் தேக்கப்பட்டது. ரூ.6 கோடியில் பணி முடிந்த பின் ஷட்டரின் உறுதித்தன்மை குறித்து அச்சம் தேவையில்லை. இந்த ஆண்டும் 25 அடி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X