தமிழ்நாடு

இன்று 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் :75 லட்சம் பேருக்கு அழைப்பு!

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. அவகாச காலம் முடிந்தும், இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 75 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட வரும்படி அரசு அழைப்பு விடுத்துள்ளது.மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுதும் 5,000 மருத்துவ முகாம்கள்
இன்று 50,000 இடங்கள்,  மெகா தடுப்பூசி முகாம் :75 லட்சம்


சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. அவகாச காலம் முடிந்தும், இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 75 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட வரும்படி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுதும் 5,000 மருத்துவ முகாம்கள் நேற்று துவங்கப்பட்டன.
அதன்படி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடமாடும் மருத்துவ வாகனங்களை, அமைச்சர்கள் சுப்பிர மணியன், சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


latest tamil news





3.5 லட்சம் பேர் பயன்



பின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தமிழகத்தில் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உட்பட 6,000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன.நான்கு நாட்களில் 38 ஆயிரத்து 704 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 3.5 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். முகாம்களிலேயே கொரோனா தடுப்பூசியும் போடப்படுகிறது. மேலும், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண்ணுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குடிசைப் பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை கிலோ பிளீச்சிங் பவுடர் வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4.16 லட்சம் குளோரின் மாத்திரைகள் உள்ளன. மாநிலம் முழுதும் 167 கோடி ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக எட்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் முகாம் நடைபெறும்.
இதுவரை 75 லட்சம் பேர், இரண்டாம் தவணை தடுப்பூசிக்கான அவகாசம் முடிந்தும் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களும், முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். இதற்காக 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
மாநிலத்தில் 72 சதவீதத்தினர் முதல் தவணை; 33 சதவீதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள், 100 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்ற இலக்கை அடைவோம்.
தமிழக அரசின் வீடு தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், தினமும் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 6.07 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


டெங்கு பாதிப்பு



இந்தாண்டில் இதுவரை 4,052 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 493 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு ஒழிப்பு பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், எம்.பி.,தயாநிதி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X