பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடுவதற்கும் மானியம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை-வரப்புகளில் மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருவாய் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புதிய மானியத் திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கீதா தெரிவித்தார்.விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் குஜிலியம்பாறை வட்டாரத்திற்கு வேம்பு 12 ஆயிரம்,

குஜிலியம்பாறை-வரப்புகளில் மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருவாய் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புதிய மானியத் திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கீதா தெரிவித்தார்.விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் குஜிலியம்பாறை வட்டாரத்திற்கு வேம்பு 12 ஆயிரம், தேக்கு 2 ஆயிரம், குமிழ் 2,950, இலவம் 500, மகா கனி 50 என மொத்தம் 17 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் வனத்துறையிடம் பெறப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.மேலும் மரக்கன்றுகள் பராமரிப்புக்கு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக கன்று ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.7 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படும். சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிட, பழங்குடியினத்தவருக்கு முன்னுரிமை உண்டு.விவசாயிகள் மரக்கன்று பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவுசெய்து, தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இருந்து தேவையான கன்றுகளை இலவசமாக பெறலாம்' என அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X