கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை மாற்றம்  : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 14, 2021
Share
Advertisement
மதுரை:சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் பானு. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:பெருந்துறை கே.எம்.சாமி குரூப் ஆப் பி.ஆர்.ஐ., நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதங்களில் இரட்டிப்புத் தொகை கிடைக்கும். முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தினால் கமிஷன் வழங்கப்படும் என சிலர் தெரிவித்தனர்.எனது பணம் ரூ. 18 லட்சம் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் ரூ.1 கோடியே 68 லட்சம்

மதுரை:சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் பானு. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பெருந்துறை கே.எம்.சாமி குரூப் ஆப் பி.ஆர்.ஐ., நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதங்களில் இரட்டிப்புத் தொகை கிடைக்கும். முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தினால் கமிஷன் வழங்கப்படும் என சிலர் தெரிவித்தனர்.எனது பணம் ரூ. 18 லட்சம் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் ரூ.1 கோடியே 68 லட்சம் செலுத்தினேன். தொகையை வழங்கவில்லை.

மதுரை, ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, சிலரை கைது செய்தனர். விசாரணையை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.இளங்கோவன்: வழக்கு விசாரணை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X