சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழி வாங்க வந்தவர்களை வெட்டிக்கொன்ற ரவுடிகள்

Added : நவ 14, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே, பழிக்குப்பழி வாங்க வந்த ரவுடிகளை வெட்டிக்கொலை செய்த ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை ஒத்தக்கடை, திண்டியூர் கண்மாய் கரை அருகே நேற்று மாலை 5:30 மணிக்கு, இரண்டு பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். எஸ்.பி., பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், கொலையானவர்களில் ஒருவர் மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.

மதுரை:மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே, பழிக்குப்பழி வாங்க வந்த ரவுடிகளை வெட்டிக்கொலை செய்த ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை ஒத்தக்கடை, திண்டியூர் கண்மாய் கரை அருகே நேற்று மாலை 5:30 மணிக்கு, இரண்டு பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். எஸ்.பி., பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், கொலையானவர்களில் ஒருவர் மதுரை மதிச்சியம் ஆர்.ஆர். மண்டபம் செல்லப்பாண்டி 25, என தெரிந்தது. இவர் மீது மதுரை நகரில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

மற்றொருவர் திருச்சி வேலு அல்லது சரவணனாக இருக்கலாம். ரவுடிகளுக்கு இடையிலான மோதலில் இரட்டை கொலை நடந்துள்ளது.போலீசார் கூறியதாவது: செல்லப்பாண்டியன் அண்ணன் மணிகண்டன், 2015ல் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழி வாங்க நினைத்த செல்லப்பாண்டியை ரவுடிகள் முந்திக்கொண்டு கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். எதிரிகளுடன் நட்பாக பழகி கொலை செய்ய முடிவு செய்து, அவர்களுடன் செல்லப்பாண்டி மது குடித்துள்ளார்.
நேற்று மது குடிக்க செல்லப்பாண்டியன் அழைத்துள்ளார். தங்களை கொலை செய்ய திட்டமிட்டு அழைக்கிறார் எனக்கருதி, தங்கள் கூட்டாளிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு அவர்கள் வந்துள்ளனர். திண்டியூர் கண்மாய் கரையில் மது அருந்திக்கொண்டிருந்த போது, இரு ஆட்டோக்களில் வந்த சிலர் செல்லப்பாண்டி உட்பட 2 பேரை வெட்டிக்கொலை செய்து தப்பினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X