எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்துக்கு காரணமான அதிகாரிகள் கணக்கெடுப்பு  தில்லுமுல்லு கான்ட்ராக்டர்களுக்கும் வருகிறது 'ஆப்பு'

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னையின் தற்போதைய வெள்ளத்துக்கு காரணமான அதிகாரிகள் குறித்து பட்டியல் எடுத்து, அவர்களின் தவறுகள் குறித்து விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் குளறுபடிகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணிகளையே மேற்கொள்ளாமல் பணம் மட்டும் பெற்ற கான்ட்ராக்டர்களையும் பட்டியல் எடுத்து, 'பிளாக் லிஸ்ட்' செய்யவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம்
 வெள்ளம், காரணமான அதிகாரிகள் ,  தில்லுமுல்லு கான்ட்ராக்டர்கள், 'ஆப்பு'


சென்னையின் தற்போதைய வெள்ளத்துக்கு காரணமான அதிகாரிகள் குறித்து பட்டியல் எடுத்து, அவர்களின் தவறுகள் குறித்து விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் குளறுபடிகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணிகளையே மேற்கொள்ளாமல் பணம் மட்டும் பெற்ற கான்ட்ராக்டர்களையும் பட்டியல் எடுத்து, 'பிளாக் லிஸ்ட்' செய்யவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சென்னை மாநகரம், கடல் நீர் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரம் மட்டுமே உள்ளது. இதனால், மழைக் காலத்தில் கடல் சீற்றம் காரணமாக வெள்ள நீரை கடல் உள்வாங்க மறுக்கிறது என்றெல்லாம், ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும் மாநகராட்சி அதிகாரிகள் காரணம் கூறினர்.


வெட்ட வெளிச்சம்இது, அறிவியல் பூர்வமாக உண்மை என்றாலும், வாரக்கணக்கில் வெள்ளம் தேங்கிய கதையெல்லாம் இதற்கு முன் நடந்தது இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு, நகரம் முழுதும் வெள்ளத்தில் தத்தளித்த போது கூட, மழை ஓய்ந்த மூன்று நாட்களில் வெள்ளம் வடிந்தது.ஆனால், தற்போது ஐந்து நாட்களில் பெய்த 46 செ.மீ., மழைக்கு, ஏழு நாட்களாக வெள்ளம் வடியாமல், பெரும் அவஸ்தைக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், 2015 பெருமழையில் வெள்ளம் வராத இடங்கள், குறைந்தபட்ச பாதிப்பை சந்தித்த இடங்கள் கூட, தற்போதைய வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.இதற்கான காரணம் புரியாமல் மக்களும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் குழம்பியுள்ளனர். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழை நீர் வடிகால் துார் வாருதல், வடிகால்களை இணைப்பு செய்தல், நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து, வெள்ளம் வடிய ஏதுவாக வைத்தல்போன்ற பணிகளை முறையாக செய்யவில்லை என்பது மட்டும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.இதில், மாநகராட்சிக்கு மட்டுமின்றி பொதுப்பணித் துறைக்கும் கணிசமான பங்கு உண்டு. சென்னை மாநகராட்சி பகுதியில், பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள நீர் வழித் தடங்கள், நீர் நிலைகளில் எந்த பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நிதர்சனம்மாநகராட்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளின் அசட்டையால், சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க நேரிட்டது. அதிலும், வழக்கத்தை விட இம்முறை அதிகளவில் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். மக்கள் படும் துயரால், பாவம் பார்த்து வருண பகவானே இடைவெளி கொடுத்துள்ள நிலையில், இன்னமும் சென்னையில் 175 இடங்களில் வெள்ளம் வடியாமல், மக்களை சோகத்திலேயே வைத்துள்ளது. பல சாலைகள் இன்னமும் போக்குவரத்திற்கு வராமல், தடை செய்யப்பட்ட நிலையே தொடர்கின்றன.இதனால் ஆண்டவர்கள், ஆள்பவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.இந்நிலையில், சென்னை வெள்ளத்திற்கு காரணமான அசட்டை அதிகாரிகள் யார் என கண்டறிய, விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க, மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. இதில் தவறுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட உள்ளனர்.


அதிகாரிகள் மீது நடவடிக்கைஅதே போல, முறைகேடு நடைபெறாவிட்டாலும், தங்கள் பணியை சரிவர செய்யாத மற்றும் அலட்சியமாக செயல் பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய உள்ளது. இதில், பெரும்பாலான பொறியாளர்கள், தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.அதே போல, மழை நீர் வடிகால், நீர் நிலைகள் மேம்பாடு, மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளில் சரிவர ஈடுபடாத கான்ட்ராக்டர்கள் பட்டியலையும் எடுத்து, அவர்களுக்கு பணப் பட்டுவாடா நிறுத்தி வைக்கவும், இனி மாநகராட்சியில் எந்த ஒப்பந்தத்திலும் அவர்கள் பங்கு பெற முடியாத வகையில், கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் 33 ஆயிரத்து 845 சாலைகளில், 5,912 சாலைகளில் மட்டுமே, அதாவது 32 சதவீதம் மட்டுமே மழை நீர் வடிகால்கள் உள்ளன. இதில், 25 சதவீத மழை நீர் வடிகால்களை மட்டுமே மாநகராட்சி பராமரித்து வருகிறது.


வடிகால் பராமரிப்புஇதைத் தவிர, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, ரயில்வே, சி.எம்.டி.ஏ., உள்ளிட்ட துறைகளும் மழை நீர் வடிகால்களை பராமரித்து வருகின்றன.மாநகராட்சி சார்பில், 30 நீர் நிலைகள் பராமரிக்கப்படுகின்றன. பொதுப்பணித் துறை உள்ளிட்ட இதர துறைகள் சார்பாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலை மற்றும் 52 கிளை கால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன.இதில், 52 கிளை கால்வாய்களை சீரமைக்க, 2019ம் ஆண்டில் 1,281 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டு, அத்துறை இன்னும் செயல்படுத்தாமல் உள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில், பன்னாட்டு வங்கி நிதி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், மத்திய அரசின் நிதி என, 3,000 கோடி ரூபாய்க்கான பணிகள் இதுவரை நடந்துள்ளன. இதில், சில பகுதிகளில், மழை நீர் வடிகால்களில் சிறு பழுது மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


விசாரணை கமிஷன்ஆனால், புதிதாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது போல கணக்கு காட்டப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு இடங்களில் துார் வாரப்படாமலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.எனவே, முதல்வர் உத்தரவுப்படி, சென்னையில் மழை பாதிப்புக்கான காரணம் குறித்து, விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும். அப்போது, 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்தும், நீர் நிலைகளுக்கு செலவிடப்பட்ட தொகை என, அனைத்தும் விசாரணையில் எடுத்துக் கொள்ளப்படும். இதில், சென்னை மாநகராட்சி மட்டுமின்றி, அனைத்து துறைகளின் பணிகளும் விசாரணைக்கு எடுக்கப்படும்.


'சஸ்பெண்ட்' நிச்சயம்அதன்படி, தவறு செய்தவர்கள், எத்துறை அதிகாரிகளாக இருந்தாலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவறு உறுதி செய்யப்பட்டால், 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகள் நிச்சயம்.வட கிழக்கு பருவ மழைக்கு முன், சென்னை மாநகராட்சி சார்பில், 800 கி.மீ., நீளத்துக்கு துார் வாரும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக நடந்தன.துார் வாரப்பட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால், அங்கு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை முற்றிலும் ரத்து செய்யப்படும். இந்த ஒப்பந்ததாரர்கள், மழை நீர் வடிகால்கள் தாண்டி, இதர பணிகள் மேற்கொண்டிருந்தாலும், அவை மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான தொகையும் நிறுத்தி வைக்கப்படும்.


கூடுதல் பணி சுமைவரும் காலங்களில் மீண்டும் அவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கப்படாது. மேலும், மாநகராட்சியில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவர். சென்னை மாநகராட்சிக்கு 300 இளநிலை பொறியாளர்கள் தேவை என்ற நிலையில், தற்போது 180 இளநிலை பொறியாளர்கள் தான் உள்ளனர். இதனால் ஒரே நபர், இரண்டு மற்றும் மூன்று வார்டுகளை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளதால், கூடுதல் பணி சுமையில் சிக்குகின்றனர். இவையும், முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


ஏழாவது நாளாக தத்தளிப்பு!சென்னையில் 22 சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. இதில், 19 சுரங்கப்பாதைகளில் மழை நீர் அகற்றப்பட்ட நிலையில், வியாசர்பாடி, தி.நகர் மேட்லி, மூலக்கொத்தளம் காக்கன் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல், 540 தெருக்களில் தேங்கிய மழை நீர் நேற்று மாலை வரை, 365 தெருக்களில் அகற்றப்பட்டது. மீதமுள்ள, 175 தெருக்களில் மழை நீர் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரை, 200க்கும் மேற்பட்ட தெருக்களில் மின்சாரம் வழங்கப்படாத நிலையில், அப்பகுதியில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் ஏழாவது நாளாக துயரத்தை அனுபவித்து வரும் மக்கள், முழுமையான இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு தினங்கள் ஆகலாம் என்ற நிலையே காணப்படுகிறது.


கோடிகளை 'அள்ளியவர்'கள்கம்பிகளை எண்ணுவரா?பொதுப் பணித் துறையிலும், சென்னை மாநகராட்சியிலும் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது.இது, மக்களை பேரிடரில் இருந்து காக்கும் வகையிலான நடவடிக்கை என்பதை மறந்து, எந்த வேலையையும் செய்யாமல் பணத்தை மட்டுமே அடிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் தான், மற்ற வேலைகளுக்கு காணப்படும் போட்டியை விட, மழைக்கால பணிகளுக்கான 'டெண்டர்'களுக்கு அதிக போட்டி காணப்படும். நடப்பாண்டிலும் அதே நிலை தான் இருந்தது. வடிகால் துார் வாரிய இடங்களில் கூட, மழை நீர் வெள்ளமாக தேங்கியது. இதனால், விரிவான விசாரணைக்கு பின், சஸ்பெண்ட் என்ற நடவடிக்கையோடு இல்லாமல், தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
15-நவ-202122:35:43 IST Report Abuse
Sathyanarayanan Subramanian விடியல் வருமா .... வராதா.....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-நவ-202120:36:23 IST Report Abuse
r.sundaram இதெல்லாம் திமுக ஆட்சியில் நடக்குமா என்ன? திமுக ஆட்சியின் பலமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இவர்களின் ஆதரவே. ஆகையால் இதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
14-நவ-202120:26:48 IST Report Abuse
venkates மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி, எல்லா இடங்களிலும் பணம் இல்லாமல் அரசாங்க வேலை நடைபெறுவது அரிது ஆட்சியாளர்கள் தற்காலிகமாக ஏமாற்றுகிறார்கள் அவளவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X