பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் காடு வளர்ப்பு திட்டம் 1.89 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி

Added : நவ 14, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்டத்தில் 'விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்' என்ற வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் ரூ.28.39 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1.89 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.இத்திட்டத்தில் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை வனத்துறை நாற்றங்காலில் இலவசமாக பெறலாம். இதற்காக

தேனி-தேனி மாவட்டத்தில் 'விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்' என்ற வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் ரூ.28.39 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1.89 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.இத்திட்டத்தில் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை வனத்துறை நாற்றங்காலில் இலவசமாக பெறலாம். இதற்காக தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் உள்பட 1 லட்சத்து 89 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் வனத்துறை உற்பத்தி செய்ய உள்ளது. இதில் வரப்பு நடவில் ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 மரக்கன்றுகளும், விவசாயநில நடவில் ஏக்கருக்கு 160 மரக்கன்று களும் வழங்கப்படும்.மரக்கன்று பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகள் ரூ.21 வழங்கப்படும். இதை 2ம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரை பெறலாம். சிறு, குறு, பெண்,ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி மூலம் பதிவு செய்து பெறலாம் என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X