தமிழ்நாடு

‛சைபர்' குற்றங்களை தடுக்க புதிய திட்டம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்டத்தில் ‛சைபர்' குற்றங்களை தடுக்க, தவிர்க்கும் வகையில் மாதத்தின் முதல் புதன் கிழமைகளில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு தின கொண்டாட்டம் கடைபிடிக்கப்பட உள்ளது.சைபர் குற்றங்களை தடுக்கவும், தவிர்க்கவும், அதிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு தினம் கொண்டாட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்களில்

தேனி-தேனி மாவட்டத்தில் ‛சைபர்' குற்றங்களை தடுக்க, தவிர்க்கும் வகையில் மாதத்தின் முதல் புதன் கிழமைகளில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு தின கொண்டாட்டம் கடைபிடிக்கப்பட உள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்கவும், தவிர்க்கவும், அதிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு தினம் கொண்டாட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்களில் இளைஞர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேனி மாவட்ட போலீசார், பள்ளி, கல்லுாரிகள், உள்ளாட்சி, நகராட்சிகள் துறைகளுடன் ஒருங்கிணைந்து மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தி உள்ளனர்.

இதில் கலெக்டர் தலைவர், எஸ்.பி., திட்ட இயக்குனர், பெரியகுளம் சப்-- கலெக்டர், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சி.இ.ஓ., கல்லுாரிகளின் மண்டல இணை இயக்குனர், மாவட்ட அரசு, தனியார் கல்லுாரி முதல்வர்கள், போலீஸ் டி.எஸ்.பி.,க்கள், ஊராட்சி - பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், நகராட்சி கமிஷனர்கள், சைபர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள், முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி கல்லுாரிகளில் சைபர் குற்றங்களை தடுக்க, தவிர்க்க போஸ்டர் வெளியீடு, ஸ்லோகன் எழுதுதல், குறும்படம் வெளியிடுதல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தெருமுனை பிரசாரங்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனால் சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் இனி மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X