பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு தேவை

Added : நவ 14, 2021
Share
Advertisement
மதுரை-''இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. அங்கு சட்டம், நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்,'' என, மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் தேசிய சட்ட வாரத்தையொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மெகா சட்ட விழிப்புணர்வு முகாமில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி கே.முரளி சங்கர் வலியுறுத்தினார்.மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வடமலை

மதுரை-''இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. அங்கு சட்டம், நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்,'' என, மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் தேசிய சட்ட வாரத்தையொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மெகா சட்ட விழிப்புணர்வு முகாமில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி கே.முரளி சங்கர் வலியுறுத்தினார்.மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வடமலை வரவேற்றார். முகாமை துவக்கி நீதிபதி கே.முரளி சங்கர் பேசியதாவது:சட்டம் அனைவருக்கும்சமம். ஒரு காலத்தில் ஏழைகளுக்கு சட்டம் எட்டாக்கனியாக இருந்தது. அனைவருக்கும் கிடைக்க செய்யும் நோக்கில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு துவங்கப்பட்டு மாநில, மாவட்ட அளவில் செயல்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்துள்ளன. விரைவில் தீர்வு காண்பது சிரமம். இதற்கு மாற்றாக 'லோக் அதாலத்' மூலம் விரைவில்வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்றார்.தலைமை குற்றவியல்நடுவர் ஜெயகுமாரி ஜெமி ரத்னா, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, எஸ்.பி.,பாஸ்கரன், அரபிந்தோ மீரா கல்வி குழும தலைவர் சந்திரன் பங்கேற்றனர்.அரசு துறை திட்டங்கள் குறித்த கண்காட்சி நடந்தது.ரூ.21 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. ஒரு குழந்தை திருமணத்தை நிறுத்த குழந்தைகள் நலக்குழு நடவடிக்கை எடுத்தது. சார்பு நீதிபதி தீபா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X