பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கப்பூர் அறிஞரை தமிழக தளத்தில் கொண்டாடுவது பெருமை

Added : நவ 14, 2021
Share
Advertisement
மதுரை -''சிங்கப்பூர் அறிஞரை தமிழக தளத்தில் கொண்டாடுவது பெருமையான விஷயம்,'' என, மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடந்த சிங்கப்பூர் தமிழறிஞர் மு.தங்கராஜன் படைப்பு குறித்த கருத்தரங்கில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.அமெரிக்கன் கல்லுாரி முன்னாள் தமிழ் மாணவர்கள் உருவாக்கிய குறிஞ்சி தமிழ் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் நடந்த இக்கருத்தரங்கில்

மதுரை -''சிங்கப்பூர் அறிஞரை தமிழக தளத்தில் கொண்டாடுவது பெருமையான விஷயம்,'' என, மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடந்த சிங்கப்பூர் தமிழறிஞர் மு.தங்கராஜன் படைப்பு குறித்த கருத்தரங்கில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.அமெரிக்கன் கல்லுாரி முன்னாள் தமிழ் மாணவர்கள் உருவாக்கிய குறிஞ்சி தமிழ் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் நடந்த இக்கருத்தரங்கில் உலக தமிழ் சங்க இயக்குனர் லலிதா தலைமை வகித்தார். கருத்தரங்கு குறித்து பெறப்பட்ட 120 கட்டுரைகள் இரண்டு பகுதி புத்தகங்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வெளியிட தங்கராஜன் சகோதரி கனகமணி பெற்றார். சிங்கப்பூர் பேராசிரியர் சுப திண்ணப்பன், தமிழாசிரியர் சங்க ஆலோசகர் சாமிகண்ணு பேசினர். எழுத்தாளர் சோ தர்மன் நிறைவுரையாற்றினார்.பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில்,''சிங்கப்பூர் தமிழறிஞர் தங்கராஜன் 3 வயதில் மலேசியா சென்றவர். மலேசியா, சிங்கப்பூர் பிரிவினைக்கு முன் அங்கு சென்றதால் அதன் பாதிப்புகளை எழுத்துகளில் வடித்துள்ளார்.சிங்கப்பூரில் பிற மொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுகின்றனர். இது வரவேற்கத்தக்கது,'' என்றார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சிங்காரவேலன், ரத்தினகுமார், பூமிசெல்வம் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X