கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவியர் உடல் எடை அதிகரிப்பு

Added : நவ 14, 2021
Advertisement
மதுரை -''கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவியர் உடல்எடை அதிகரித்துள்ளது அபாயகரமான விஷயம்,'' என, மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் துறை தலைவர் சுப்பையா தெரிவித்தார்.டீன் ரத்தினவேல் தலைமை வகித்தார். டாக்டர் சுப்பையா பேசியதாவது: இன்சுலின் கண்டுபிடித்த நுாற்றாண்டு விழாவில் வாழ்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்

மதுரை -''கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவியர் உடல்எடை அதிகரித்துள்ளது அபாயகரமான விஷயம்,'' என, மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் துறை தலைவர் சுப்பையா தெரிவித்தார்.டீன் ரத்தினவேல் தலைமை வகித்தார். டாக்டர் சுப்பையா பேசியதாவது: இன்சுலின் கண்டுபிடித்த நுாற்றாண்டு விழாவில் வாழ்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன் கிராமங்களில் 3 சதவீதம், நகரங்களில் 6 சதவீதமாக சர்க்கரை நோய் இருந்தது. தற்போது கிராமங்களில் 8, நகரங்களில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் உடற்பருமன் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பின்னாளில் சர்க்கரை நோய் வரும் ஆபத்தை ஏற்படுத்தும். உடல் எடை குறைப்பது, சரிவிகித உணவுடன் காலைக்கடன் போல உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.சர்க்கரையில் அக்கறை என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை கண்காணிப்பாளர் தர்மராஜ் பேசினர்.உதவி பேராசிரியர் ராகவன் நன்றி கூறினார். மாணவர்களுக்கான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X