சிறப்பு ரயில்கள் இன்று முதல் வழக்கமான ரயில்களாக இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயில்கள் இன்று முதல் வழக்கமான ரயில்களாக இயக்கம்

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (12)
Share
சென்னை-கோவிட் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து, சிறப்பு ரயில்கள் இன்று முதல் படிப்படியாக, வழக்கமான ரயில்களாக பழைய எண்களுடன் இயக்கப்பட உள்ளன.கோவிட் பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்குபின், ஜூன் முதல் குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. ஊரடங்கு தளர்விற்கு ஏற்ப,

சென்னை-கோவிட் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து, சிறப்பு ரயில்கள் இன்று முதல் படிப்படியாக, வழக்கமான ரயில்களாக பழைய எண்களுடன் இயக்கப்பட உள்ளன.



latest tamil news


கோவிட் பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்குபின், ஜூன் முதல் குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. ஊரடங்கு தளர்விற்கு ஏற்ப, சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது.

தற்போது, கோவிட் பாதிப்பு குறைந்துள்ளதால், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்கள், வழக்கமான ரயில்களாக அதற்குரிய எண்களுடனும், இன்று முதல் இயக்கப்பட உள்ளன. பொதுவாக, வழக்கமான ரயில்கள் ஐந்து இலக்க எண்களுடன் இயக்கப்படும்.அதில், தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களின் ஐந்து இலக்க எண்களில், முதல் எண் ஒன்றாம் எண்ணில் இருந்து ஆரம்பிக்கும். சிறப்பு ரயில்கள் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தன


latest tamil news


.சென்னை எழும்பூர், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், இன்று முதல் படிப்படியாக பழைய எண்கள் மற்றும் பழைய பெயர்களுடன் இயக்கப்படும்.பழைய பெயர்பழைய கட்டணமே வசூலிக்கப்படும். இதேபோல் மற்ற ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களும், பழைய பெயர் மற்றும் எண்களுடன் இயக்கப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X