அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தலைவர் நட்டா 24ல் தமிழகம் வருகை

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை-பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூரில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் பணியில், தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், பா.ஜ.,வுக்கு மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன.முதல் கட்டமாக 17

சென்னை-பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூரில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் பணியில், தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.



latest tamil news


இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், பா.ஜ.,வுக்கு மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன.முதல் கட்டமாக 17 மாவட்டங்களில், மாவட்ட அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர், நெல்லை, திருப்பத்துார் மற்றும் வாணியம்பாடியில் பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன.இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் செல்லும் அவர், மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.


latest tamil news


அங்கிருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நெல்லை, திருப்பத்துார், வாணியம்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார். பின், திருப்பூர் அலுவலகத்தில் நடக்கும், தமிழக பா.ஜ.,வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். விழாவில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில், தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக, நட்டா தமிழக பா.ஜ.,வினருக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-நவ-202116:52:47 IST Report Abuse
Barakat Ali வாரிசு அரசியலை கட்சியில் புகுத்தியதற்கு எனக்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளது ஆகவே இவர் தமிழகம் வந்தால் கருப்பு பலூனை இஷ்டத்துக்கு பறக்க விடுவேன் இப்படிக்கு மாஜி மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-நவ-202113:53:02 IST Report Abuse
Visu Iyer கூட்டத்திற்கு யாரும் வர மாட்டாங்க என்று வீடியோ காண்பிரன்சி .. புரிகிறது.. செலவு கணக்கை கட்சியில் காட்டினால் தானே பாக்கெட் நிரம்பும்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-நவ-202113:51:46 IST Report Abuse
Visu Iyer கருப்பு பலூன் தயாரித்து வைக்க வேண்டுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X