தமிழ்நாடு

விருதையில் அதிகாரிகள் அலட்சியம்: மூட்டைகளில் நெல்மணிகள் முளைப்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் சேமிப்புக் கிடங்குக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்தும், கருப்பாக மாறியும் இருந்தன.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள், தொடர் மழையில் நனைந்து வீணாகின. தரைத்தளம், மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியில் மூட்டைகளை
 விருதையில் அதிகாரிகள் அலட்சியம்: மூட்டைகளில் நெல்மணிகள் முளைப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் சேமிப்புக் கிடங்குக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்தும், கருப்பாக மாறியும் இருந்தன.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள், தொடர் மழையில் நனைந்து வீணாகின. தரைத்தளம், மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியில் மூட்டைகளை அடுக்கி வைத்ததால், மழையில் நனைந்து, நெல் மணிகள் அழுகி, முளைத்து விட்டன.விருத்தாசலம் அடுத்த இருப்பு, சேப்ளாநத்தம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, விருத்தாசலம் சேமிப்புக் கிடங்குக்கு, நேற்று பகல் 1:00 மணியளவில், நெல் மூட்டைகளுடன் 15 லாரிகள் வந்தன.

அவற்றில் இருந்த நெல் மணிகள் முளைத்து, கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசின. சேமிப்புக் கிடங்கில், அவற்றை இறக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு லாரியிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இவ்வாறு காணப்பட்டன.தரக்கட்டுப்பாடு அலுவலர் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர் சோதனை செய்து, பாழான நெல் மூட்டைகளை ரைஸ் மில்லுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாமல், நெல் மணிகள் முளைத்து வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X