பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த பணி ஆய்வுக் கூட்டம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். முன்னதாக, மாவட்டத்தில், முகையூர், அடுக்கம், கண்டாச்சிபுரம் பள்ளிகளில் நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு
 வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த பணி ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் : வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

முன்னதாக, மாவட்டத்தில், முகையூர், அடுக்கம், கண்டாச்சிபுரம் பள்ளிகளில் நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் முகாமை ஆய்வு செய்தார்.அப்போது, மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 2022 தொடர்பாக எடுத்த நடவடிக்கை விபரம் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு செய்த விபரம் குறித்து கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

மக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள பெறப்படும் படிவங்கள், இரட்டை பதிவு உள்ள இனங்கள் மீது உரிய கள விசாரணை செய்து முடிவு செய்ய வேண்டும்.மாவட்ட எல்லையில் உள்ள பூத்களில் இரட்டை பதிவுகள் இருந்தால் அதை கண்டறிந்து, நீக்கம் செய்ய வேண்டும். இறந்தவர்கள் பெயர்களை கண்டறிந்து அதை உடனே நீக்க வேண்டும் என பார்வையாளர் மகேஸ்வரன் அறிவுறுத்தினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி ஆட்சியர் அமித், ஆர்.டி.ஓ.,க்கள் சாய்வர்தினி, அரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X