ரவுடியை கொல்ல திட்டமிட்ட 5 பேர் கைது

Added : நவ 14, 2021
Share
Advertisement
வில்லியனுார் : புதுச்சேரியில் ரவுடியை கொலை செய்ய திட்ட மிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, அங்கு கும்பலாக

வில்லியனுார் : புதுச்சேரியில் ரவுடியை கொலை செய்ய திட்ட மிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, அங்கு கும்பலாக நின்றிருந்த 7க்கும் மேற்பட்டோர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.அவர்களை விரட்டி சென்ற போலீசார் 5 பேரை மடக்கினர். அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு, கத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அனைவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சல்மான்கான், 21; ராஜி, 18; சிற்றரசன், 20; சி.என்., பாளையம் வீரபாகு, 20, ரவிக்குமார், 20, என, தெரியவந்தது.இவர்கள் வில்லியனுார் அடுத்த உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். வழக்குப் பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X