பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நுாற்றாண்டு நிறுவனர் தின விழா

Added : நவ 14, 2021
Share
Advertisement
துாத்துக்குடி : துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நுாற்றாண்டு நிறுவனர் தின விழா நடந்தது.துாத்துக்குடி ஏ.வி.எம்., கமலவேல் மகாலில் நடந்த விழாவில் கோபால் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொது மேலாளர் சூரியராஜ் வரவேற்றார்.வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, நிறுவனரின் குடும்ப உறுப்பினர்களை
 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நுாற்றாண்டு நிறுவனர் தின விழா

துாத்துக்குடி : துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நுாற்றாண்டு நிறுவனர் தின விழா நடந்தது.துாத்துக்குடி ஏ.வி.எம்., கமலவேல் மகாலில் நடந்த விழாவில் கோபால் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பொது மேலாளர் சூரியராஜ் வரவேற்றார்.வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, நிறுவனரின் குடும்ப உறுப்பினர்களை கவுரவித்தார். துணை தலைவர் சிதம்பரநாதன் அறிமுக உரையாற்றினார். வங்கி தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். வங்கியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் இயக்குனர் ராஜேந்திரன் வாழ்த்தி பேசினர். வங்கியின் சமூக பொறுப்பு குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. விழாவில் வங்கி நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

வங்கியின் 100வது இ-லாபியை துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருமதி துவக்கி வைத்தார். ரத்த தான முகாம் நடத்தி, 60 யூனிட் ரத்தம் சேகரித்து, உயிர் காக்க வழங்கப்பட்டது.தொடர்ந்து லட்சுமி மகாலில் நடந்த கடன் வழங்கும் முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கினர்.துாத்துகுடி முகாமில் 200 பயனாளிகளுக்கு 103 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. வங்கி ஏற்பட்டின்பேரில், 161 கிராமங்களில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் 11,726 பேர் பயனடைந்தனர். நாடு முழுதும் முன்களப்பணியாளர்கள் 100 பேருக்கு மரியாதை செய்யப்பட்டது. பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X