நீட் , ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில் அலன் பயிற்சி மைய மாணவர்கள் சாதனை| Dinamalar

இந்தியா

'நீட்' , ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில் அலன் பயிற்சி மைய மாணவர்கள் சாதனை

Added : நவ 14, 2021
Share
புதுச்சேரி : நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளில் புதுச்சேரி அலன் பயிற்சி மைய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றிப் பெற்று சாதித்துள்ளனர்.ராஜஸ்தான் கோட்டாவை தலைமையிடமாக கொண்டு அலன் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் கிளை புதுச்சேரி பாரதி வீதியில் இயங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் மற்றும் ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகளை
 'நீட்' ,  ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில் அலன் பயிற்சி மைய மாணவர்கள் சாதனை

புதுச்சேரி : நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளில் புதுச்சேரி அலன் பயிற்சி மைய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றிப் பெற்று சாதித்துள்ளனர்.

ராஜஸ்தான் கோட்டாவை தலைமையிடமாக கொண்டு அலன் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் கிளை புதுச்சேரி பாரதி வீதியில் இயங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் மற்றும் ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்து புதுச்சேரி அலன் பொறுப்பாளர் சவுரப் திவாரி வெளியிட்டுள்ள அறிக்கை:நீட் தேர்வில் இப்பயிற்சி மைய மாணவர் ஆதர்ஷ் 720க்கு 685 மதிப்பெண் பெற்று புதுச்சேரியில் முதலிடம் பிடித்தார். மாணவர்கள் தியனேஷ் -680, தஜீமுல் உசேன்- 677, ராகவ சூர்யா- 665, மாணவிகள் யாசோதா- 664, பூஜா தீப்தி -640, தீபன் தீபன்கர் மண்டல்- 634, சிவபிரியா -633, சுதர்சன் -631, தினேஷ் கண்ணாராஜ் -613, சகானா -601, பாரதி -600, மதிப்பெண பெற்று சாதித்துள்ளனர். 650 மதிப்பெண்ணுக்கு மேல் 5 மாணவர்கள், 600க்கு மேல் 12 மாணவர்கள், 550க்கு மேல் 30 மாணவர்கள், 500க்கு மேல் 55 மாணவர்கள், 450க்கு மேல் 90 மாணவர்கள் பெற்றுள்ளனர் புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள நீட் தேர்ச்சி பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை பிடித்துள்ளனர். ஜே.இ.இ., மெயின் தேர்வில் 47 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். 5 மாணவர்கள் 99 சதவீத மதிப்பெண், 14 மாணவர்கள் 95 சதவீத மதிப்பெண், 12 மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியலில் 2 மாணவர்களும், வேதியியலில் 1 மாணவரும் 100 சதவீத மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுள்ளனர். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் 10 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவற்றில் அகில இந்திய அளவில் 5 ஆயிரம் இடத்திற்குள் 2 மாணவர்களும், 10 ஆயிரத்திற்குள் 4 மாணவர்கள், 15 ஆயிரத்திற்குள் 7 மாணவர்கள், 20 ஆயிரத்திற்குள் 9 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். புதுச்சேரி அலன் பயிற்சி மையத்தை சேர்ந்த 2 மாணவர்கள் எய்ம்ஸ் கல்லுாரியிலும், 27 மாணவர்கள் ஜிப்மர்

கல்லுாரியிலும், 7 மாணவர்கள் ஐ.ஐ.டி., யிலும், 40 மாணவர்கள் என்.ஐ.டி.,யிலும், 90 மாணவர்கள் பிற கல்லுாரிகளிலும் சேர தகுதி பெற்றுள்ளனர்.என்.டி.எஸ்.இ., முதன்மை நிலை தேர்வில் 9 மாணவர்களும், என்.டி.எஸ்.இ., இரண்டாம் நிலை தேர்வில் 5 மாணவர்களும், வேதியியல், உயிரியல் ஒலிம்பியாட் தேர்வுகளில் தலா ஒரு மாணவரும் தேர்வாகி உள்ளனர் வெற்றி பெற்ற மாணவர்களை அலன் பயிற்சி நிறுவன பொறுப்பாளர் சவுரப் திவாரி பாராட்டினார்.இந்தாண்டிற்கான நீட் ரிப்பீட்டர் கோர்ஸ் அட்மிஷன் நடக்கின்றது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி தங்கும் வசதி உள்ளது. மேலும் விபரங்களுக்கு 97413030 80,9900804950, 9655995899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X