குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் 18 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கிய நிலையில், கிடைக்காதவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கினார். குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அரசமங்கலம் ஊராட்சி, மாருதி நகரில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, வீட்டுமனை பட்டா வழங்கினார்.அப்பகுதியில் 31 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், 18 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினர். அதிருப்தியடைந்த மற்றவர்கள் முதல்வரை சந்திக்க முயன்ற போது, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
முதல்வர் சென்றதும், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்,''31 குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி வசித்து வரும் நிலையில் 18 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளனர். மற்றவர்களுக்கு மனைப்பட்டா வழங்கவில்லை. முதல்வரை சந்திக்க முயன்றபோது தடுத்து நிறுத்தி விட்டன", எனக்கூறி தாசில்தார் சையத் அபுதாகிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE