சகோதரர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் புதுச்சேரியில் வைரலாகும் வீடியோ

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சகோதரர்களை பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் ஜான்பால். புடவை வியாபாரி யான இவர், சாரம் பகுதியை சேர்ந்த குமார் என்ப வரிடம் கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதில், 20 ஆயிரம் ரூபாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பே

புதுச்சேரி : புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சகோதரர்களை பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் ஜான்பால். புடவை வியாபாரி யான இவர், சாரம் பகுதியை சேர்ந்த குமார் என்ப வரிடம் கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதில், 20 ஆயிரம் ரூபாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பே குமாரிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரின் நண்பர் உழவர்கரையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஜான்பாலுக்கு மொபைல்போனில் தொடர்பு கொண்டு குமாருக்கு கொடுக்க வேண்டிய பணம் தொடர்பாக நேரில் பேச வேண்டும் என அழைத்துள்ளார்.இதனை அடுத்து ஜான்பால், தனது அண்ணன் சதிஷ் குமாருடன் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் உள்ள இந்திரா காந்தி சதுக்கம் அருகே சென்றுள்ளனர்.அப்போது அங்கிருந்த பிரகாஷ் அவரது நண்பரும் ரவுடியுமான தட்டாஞ்சாவடி முத்து மற்றும் இருவர் குமாருக்கு தரவேண்டிய 1.5 லட்ச ரூபாய் பணம் எங்க என கேட்டு, ஆபாசமாக திட்டி உள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த சகோதரர்கள், குமாருக்கு தாங்கள் 10 ஆயிரம் ரூபாய் தான் பாக்கி தர வேண்டும் என, கூறியுள்ளனர்.இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் ஜான்பால் மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கி, கீழே கிடந்த செங்கலை எடுத்து அடித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த இருவரும் அருகே இருந்த பள்ளி கல்வி வளாகத்திற்கு சென்று பதுங்கிக் கொண்டு, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தாக்கப்பட்ட ஜான்பால் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உழவர்கரையை சேர்ந்த பிரகாஷை கைது செய்து, விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள ரவுடி முத்து மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.மேலும் ஜான்பால் மற்றும் அவரது சகோதரரை ரவுடிகள் கொலை வெறி தாக்குதல் நடத்துவதை அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் பொது இடத்தில் ரவுடிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X