அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாஜ., குறித்த விமர்சனம்; வைகோவுக்கு தகுதி கிடையாது; பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை : 'பா.ஜ., குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி வைகோவுக்கு கிடையாது' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 'பா.ஜ.,வில் இப்போது வந்து சேர்ந்திருக்கிற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. 'வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.


சென்னை : 'பா.ஜ., குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி வைகோவுக்கு கிடையாது' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.



latest tamil news




அவரது அறிக்கை: 'பா.ஜ.,வில் இப்போது வந்து சேர்ந்திருக்கிற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. 'வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைக்கு என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது' என்று வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க.,வில் இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும், 'சிகரெட் கடை' வைத்திருந்தார். வைகோவை நம்பி தி.மு.க.,வை விட்டு வெளியேறி உயர் நீத்தவர்களுக்கு, வைகோ செய்த துரோகம் தெரியும். தமிழினத்தை கொன்று குவித்த தி.மு.க., என்று கூறிவிட்டு, ஒரு எம்.பி., பதவிக்காக, அதே தி.மு.க.,விடம் கட்சியை அடகு வைத்த, கேவல அரசியல் வைகோவுக்கு தெரியும்.


latest tamil news




'வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு, ஓட்டு அரசியலுக்காக, 'எதிர்கால முதல்வரே' என்று ஸ்டாலினை அழைத்த, சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். துரோக, கேவல, சந்தர்ப்பவாத அரசியல் எல்லாம் அண்ணாமலைக்கு தெரியாது. வாயை மூடி மவுனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி, அண்ணாமலை அல்ல.

பா.ஜ., குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி வைகோவுக்கு கிடையாது.இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-நவ-202123:23:59 IST Report Abuse
Aarkay பெட்டி வாங்கினா, உளறித்தான் ஆகவேண்டும். ஆமை பெட்டி வாங்குவதில் வல்லவர்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-நவ-202119:45:43 IST Report Abuse
r.sundaram யார் கட்சித்தலைவராக வரக்கூடாது, முதல்வராக வரக்கூடாது என்று எதிர்த்து தனி கட்சி கண்டாரோ, அவரிடமே சரண் அடைந்து கூட்டணி தலைவராகவும் கண்டு இன்று அரசியல் செய்யும் வைகோவுக்கு அரசியல் செய்யவே தகுதி கிடையாது.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
14-நவ-202118:02:17 IST Report Abuse
RaajaRaja Cholan நீங்க வேனும்ம்னுனா ஒரு லிஸ்ட் தயாரித்து கொடுங்கள் , யாருக்கு தகுதி உள்ளது என்று சான்றிதழ் . எல்லாவனுமே திருடன் தான் , இப்ப மக்கள் கேள்வி என்னவென்றால் யாரு கொஞ்சம் நல்ல திருடன் ,ரொம்ப திருட தெரியாதா சிறு திருடன் என்பது தான் , வேற வழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X