கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத தாது மணல் விவகாரம்; உயர் நீதிமன்றம் கேள்வி

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்ததாக கூறுவதை கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை, அறிக்கையாக தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தென் மாவட்டங்களில், சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதை தடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த


சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்ததாக கூறுவதை கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை, அறிக்கையாக தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news




தென் மாவட்டங்களில், சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதை தடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது.இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் வி.சுரேஷ் நியமிக்கப்பட்டார். அவரும் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தார்.

அதில், கார்னட், இலுமினேட் உள்ளிட்ட தாது மணல் ஏராளமாக எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் கணிசமான அளவு, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, வழக்கறிஞர் சுரேஷ் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலிக்க அவகாசம் கோரினார்.


latest tamil news



இதையடுத்து, இவ்வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை சேர்த்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அறிக்கைக்கு நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்கவும் அனுமதிக்கப் பட்டது. தென்மாவட்டங்களில், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததாக கூறுவதை கண்காணிக்க, அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கையை தெரிவிக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தால், அதுகுறித்து அறிக்கை அளிக்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை டிசம்பர், 3க்கு தள்ளி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-நவ-202101:49:26 IST Report Abuse
DARMHAR மேல்முறயீடு என்ற வகையில் உச்ச நீதி மன்றம் வரை சென்று பல முறை ஒத்திவைக்கப்பட்டு முடிவான தீர்ப்பு வழங்கப்பட ஒரு மாமாங்கத்திற்கும் மேல் ஆனாலும் அதிலொன்றும் வியப்பில்லை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-நவ-202121:32:51 IST Report Abuse
RajanRajan இங்கே தான் எந்த ஒரு விதிமீறலும் அரங்கேறும் போது கண்டுக்கவே மாட்டானுங்க. அவனவன் கோடிக்கணக்கில் முழுங்கி ஏப்பம் விட்டவுடன் தான் கடாயை ஏற்றி வைத்து அடுப்பு பத்த வைப்பானுங்க. அப்புறம் என்ன ஊழல் பங்காளிங்க கூட்டு வக்கீல்கள் எல்லோருமே சேர்ந்து சாட்சி ஆதாரங்களை தேடி புடிச்சு அழிக்கும் வரை கோர்ட் ப்ரோஸடிங்ஸ் ரீல் ஓடிக்கிட்டே இருக்கும். போலீஸ் இனொரு பக்கம் ஒரு ஆயிரம் பக்க கேஸ் நாவல் எழுதி நீதி அண்ணா கிட்டே கொடுப்பர். அதை அவரு படிச்சு தெளிஞ்சு வரும் போது அந்த ஜட்ஜ் சாமி ஒய்வு பெற்று அடுத்த நீதிமான் கைக்கு கேஸ் போய்டும். இனி அவரு வறுத்து வறுத்து பார்த்து வர்றதுக்குள்ளே ஆட்டைய போட்டவன் செத்து பூடுவன். அப்புறமா அவன் ஆண்டு அனுபவித்த சொத்து பத்துகளை அவன் பரம்பரை அனுபவிக்க துவங்கி விடும். ஆனா கேஸ் கட்டு மாட்டும் உயிரோட்டமா வென்டிலேட்டர்லே ஓடிக்கிட்டே இருக்கும் கன்னித்தீவு சிந்துபாத் மாதிரி. இந்த தாதுமணல் கொள்ளைகாரங்க இருக்காங்களே அதுங்க ஒரு பெரிய மாபியா கூட்டம் ஜுட்ஜ் சாமிகளா. ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாதுங்கிற கேசுகள். கடைசில சட்ட புத்தகத்தகத்தை படிச்சு கிழிச்சது தான் மிச்சம்னு சீன் ஓடும்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
14-நவ-202116:03:13 IST Report Abuse
Ram என்னக்கு தெரிந்து விஜய் மல்லையா நீரவ் மோடி அஜித் பவார் போன்றோரின் சொத்துக்களை முடக்கியது மத்திய ப ஜ க அரசு மட்டும்தான் , மற்றவையெல்லாம் பேசி பேசியே காலத்தை ஒட்டிவிட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X