சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை மாணவி தற்கொலை: சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுபிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் இதற்கு முன்
கோவை, பள்ளி மாணவி, தற்கொலை, தலைமை ஆசிரியை,முதல்வர் கைது

கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுபிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் இதற்கு முன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்தார். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, 35, தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், 52, மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

மாணவி தற்கொலை பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது | Girl Suicide | Principal Arrested | Dinamalar


latest tamil news




இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


அமைச்சர் ஆறுதல்

இதனிடையே தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்தினரை அமைச்சர் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், மாணவி தற்கொலை மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்தில் நடந்தது போல் உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-202104:44:08 IST Report Abuse
meenakshisundaram தமிழ் நாட்டிலே தவறிழைத்து தலைமறைவானவங்க அநேகமா கர்நாடகாவுக்குத் தான் போறாங்க ?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-நவ-202108:37:16 IST Report Abuse
Sridhar அந்த எலிசா தந்தை மற்றும் ரீட்டாவின் தாத்தா வை விட்டுட்டாங்களே? ஏன்?ஏன்?
Rate this:
Cancel
Sankara Narayanen - Bahrain,பஹ்ரைன்
16-நவ-202117:57:32 IST Report Abuse
Sankara Narayanen இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. தவறு செய்த நபருக்கு தண்டனை அளிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X