பொது செய்தி

தமிழ்நாடு

நீரோடையில் தண்ணீர் திருட்டு: எமரால்டு அணை நீர்மட்டம் குறைகிறது

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஊட்டி: ஊட்டி அருகே நீரோடையை மறித்து, தண்ணீர் திருடுவதால், எமரால்டு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட எமரால்டு அணை, 184 அடி கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் இங்கு சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரால், குந்தா, கெத்தை, பரளி மின் நிலையங்களில் தினசரி, 455 மெகாவாட் மின் உற்பத்தி
 நீரோடை, தண்ணீர் திருட்டு, எமரால்டு அணை, நீர்மட்டம், குறைகிறது

ஊட்டி: ஊட்டி அருகே நீரோடையை மறித்து, தண்ணீர் திருடுவதால், எமரால்டு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட எமரால்டு அணை, 184 அடி கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் இங்கு சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரால், குந்தா, கெத்தை, பரளி மின் நிலையங்களில் தினசரி, 455 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில், பரவலாக மழை பெய்தாலும், அணைகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் நிரம்பவில்லை. இதனால், மூன்று மின் நிலையங்களில் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.


latest tamil news




எமரால்டு அணைக்கு வரும் நீரோடை தண்ணீரை மறித்து, மலை காய்கறி தோட்டங்களுக்கு திருட்டு தனமாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், தான் அணையில் தண்ணீர் சேகரமாகாமல் மிகவும் குறைந்து வருவதாக, ஆய்வில் தெரியவந்தது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'குந்தா மின் வட்டத்தில், அப்பர்பவானி, எமரால்டு அணையை நம்பி மின் உற்பத்தி நடந்து வருகிறது. நீரோடை தண்ணீரை திருடுவதால், அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, 60 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுகிறது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
14-நவ-202119:09:04 IST Report Abuse
தியாகு திருடியவர்களை நன்றாக சோதித்து பாருங்கள். கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் அடையாள அட்டை வைத்திருப்பார்கள். டிசைன் அப்படி.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
14-நவ-202114:58:48 IST Report Abuse
amuthan சென்னையில் இருந்து கொஞ்சம் தண்ணீரை அனுப்புங்கள்
Rate this:
Cancel
14-நவ-202113:27:52 IST Report Abuse
சம்பத் குமார் 1). என்னடா இது ஊட்டிக்கு வந்த சோதனை?2). எமரால்டு என்ற பெயர் வைத்த பிறகும் எப்படி இந்த அணையில் இருந்து தண்ணீர் திருட தயிரியம் வந்தது?? பெயரின் மீது பயம் இல்லாமல் போய்விட்டது. திக மற்றும் திருமாவளவன் இதனை கவனிக்க வேண்டும்.3). என்ன இது இதுவரை இந்த மாதிரி விஷயங்கள் அதிமுக ஆட்சியில் கண்ணில் படாமல் போய்விட்டது.4). எப்படி திமுக ஆட்சியில் இது நம் கண்ணில் படுகிறது. 5). ஆட்சி மாறியதால் எல்லாம் இலவசம் என்று ஊட்டி மக்கள் நினைக்கிறார்களா? 6). இல்லை அந்த தொகுதி எம்எல்ஏ தேர்தலில் இந்த மாதிரி வாக்குறிதி தந்தாரா??? 7). புடிச்சு சம்பந்தப்பட்ட எஸ்டேட் மேனேஜர் மற்றும் முதலாளிகளை உள்ளே வையுங்கள். 8). கரண்ட் ஒரு வருடத்திற்கு கட் பண்ணுங்கள். அப்புறம் எப்படி மோட்டார் ஒடும். 9). ஜெனரேட்டரில் ஒட்டினால் ஜப்பத்தி பண்ணுங்க ஜெனரேட்டரை. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X