பொது செய்தி

தமிழ்நாடு

விளைபொருள் வீணாகாது... சோதனைகள் எளிதாகின்றன!

Added : நவ 14, 2021
Share
Advertisement
நாட்டில் தினமும், ரூ. 244 கோடி வேளாண் விளைபொருட்கள் வீணடிக்கப்படுகின்றன. விரைவில் அழியும் தன்மைவாய்ந்த பழங்கள், காய்கறிகள் தரம் ஆய்வு செய்யப்படுவதால், வெளியூர் சந்தைகளுக்கு அனுப்புவதற்கு முன், வீணாவதை தடுக்க முடியும். ஆனால், விளைபொருள் தொடர்பான சோதனைகளுக்கு, அதிக செலவாகிறது; சோதனை முடிவுகள் தாமதமாவதால், காத்திருக்க வேண்டியுள்ளது.குஜராத் காந்திநகரை மையமாகக் கொண்ட InfyU
 விளைபொருள் வீணாகாது... சோதனைகள் எளிதாகின்றன!

நாட்டில் தினமும், ரூ. 244 கோடி வேளாண் விளைபொருட்கள் வீணடிக்கப்படுகின்றன. விரைவில் அழியும் தன்மைவாய்ந்த பழங்கள், காய்கறிகள் தரம் ஆய்வு செய்யப்படுவதால், வெளியூர் சந்தைகளுக்கு அனுப்புவதற்கு முன், வீணாவதை தடுக்க முடியும். ஆனால், விளைபொருள் தொடர்பான சோதனைகளுக்கு, அதிக செலவாகிறது; சோதனை முடிவுகள் தாமதமாவதால், காத்திருக்க வேண்டியுள்ளது.

குஜராத் காந்திநகரை மையமாகக் கொண்ட InfyU Labs என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், இன்பிஷெர் (InfyZer) என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை தயாரித்துள்ளது. நிறமாலையியல் பயன்படுத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளின் தரத்தை வகைப்படுத்துகிறது.


சோதனை எளிது



இதை பயன்படுத்தி செய்யப்படும் சோதனைகள் செலவு குறைந்தவை. அதிநவீன மற்றும் விலை உயர்ந்த இயந்திரங்களைக் கொண்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தேவையில்லை. துல்லியமான முடிவுகளை உடனடியாகப் பெறலாம்.சோதனை செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளின் ரசாயன கலவை பற்றிய விரிவான அறிக்கையைப் பெறலாம். இதன் மூலம், பகுப்பாய்வு செய்து, விளைபொருளை வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.பழங்கள், காய்கறிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டியதில்லை. கொள்முதல் நேரத்தில் சோதனை செய்யலாம். போக்குவரத்து காரணமாக ஏற்படும் கூடுதல் செலவு மிச்சமாகிறது.


எப்படி சோதிப்பது?



பழங்கள், காய்கறிகளை இந்த கருவியால் ஸ்கேன் செய்ய வேண்டும். 'புளூடூத்' வழியாக இந்த நிறுவன செயலியுடன் கருவி இணைக்கப்பட்டுஉள்ளது. தரவு - செயற்கை நுண்ணறிவு டேட்டா உள்ள 'கிளவுட்' சேவையகங்களுக்கு இவை அனுப்பப்படும். உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, செயலிக்கு மீண்டும் பகிரப்படும்; சோதனை முடிவுகளைப் பார்க்கலாம். தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் இருந்தால், மொபைல்போன் திரையில் காட்டும்.

சில வினாடிகளில்...ஈரப்பதம் சரிபார்த்தல், பூச்சிக்கொல்லி அளவு, ஊட்டச்சத்து, கரையக்கூடிய திடப்பொருட்கள், உறுதி, ஆயுள்காலம், சர்க்கரை உள்ளடக்கம், ரசாயன கலவை உள்ளிட்ட முடிவுகளை, சில வினாடிகளில் பெறலாம். பழங்கள், காய்கறிகளில் சுவை, அமைப்பு, ஊட்டச்சத்து, உயிரியல் தன்மை உள்பட உள்புறக்காரணிகள், தோற்றம், சீரான தன்மை, முதிர்ச்சி உள்பட வெளிப்புறக்காரணிகளையும் கண்டறிந்து தரம் அறியலாம்.மேலும் விபரங்களுக்கு: www.infyulabs.com, மொபைல்போன்: +91-6397645838, இ மெயில்:- hello@infyulabs.com

- சேதுராமன் சாத்தப்பன்

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள் -

இ மெயில்: sethuraman.sathappan@gmail.com,

மொபைல் போன்: 9820451259

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X