சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் மழை தொடர்கிறது: 65 முகாம்களில் 4 ஆயிரம் பேர்

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (நவ., 13) காலை முதல் மழை அளவு குறைந்துள்ளதாலும், அணை பகுதிகளில் மழை நேற்று இரவு முதல் இல்லாததாலும் அதிகாரிகள் சற்று
குமரி, மழை தொடர்கிறது,முகாம்,மூன்று அமைச்சர்கள், முகாம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.


latest tamil news



நாகர்கோவிலில் வெள்ளத்தில் மூழ்கும் வீடுகள் | Rain | Flood | Nagercoil Flood | Dinamalarnews

latest tamil news




வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (நவ., 13) காலை முதல் மழை அளவு குறைந்துள்ளதாலும், அணை பகுதிகளில் மழை நேற்று இரவு முதல் இல்லாததாலும் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நிலைமையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.


latest tamil news


இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைபகுதிகளில் மழை இல்லை. இந்த அணைகளில் இருந்து தலா ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை பகுதிகளில் மழை இல்லாததாலும், இதர பகுதிகளில் மழை குறைந்துள்ளதாலும் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


நாளை முதல்வர் வருகை


கன்னியாகுமரி மாவட்ட வெள்ள சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி வர உள்ளார் இது தொடர்பாக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் பெரியகருப்பன் மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s vinayak - chennai,இந்தியா
14-நவ-202116:49:04 IST Report Abuse
s vinayak குமரி வெள்ள நிகழ்வுகள் மட்டும் அப்படியே அப்டேட் செய்திகள் முழுவதும் ஊடகங்களால் கொடுக்கமுடிகிறதே? என்ன மாயமோ?
Rate this:
Cancel
14-நவ-202116:40:11 IST Report Abuse
ராஜா கன்னியாகுமரிக்காரங்களை காப்பாத்த வாடிகன்ல இருந்தில்ல ஆள் வரச்சொல்லனும்.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
14-நவ-202114:06:28 IST Report Abuse
ஆனந்த் செருப்பு இல்லாமல் சேற்றில் கால் வைக்க மாட்டேன் என்று தூய ஆவி ஒப்பாரி இட்ட மாவட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X